நீண்ட வருடங்களுக்கு பிறகு மலையாள சரித்திர படத்தில் சீயான் விக்ரம்!
தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகர்களில் ஒருவர் நடிகர் சீயான் விக்ரம். இவர் தற்போது கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் துருவநட்சத்திரம் படத்தில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து, ராஜேஷ்.எம்.செல்வா இயக்கத்த்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இதனை அடுத்து சீயான் விக்ரம் மலையாள படம் ஒன்றில் நடிக்க உள்ளார்.
அந்த படம் கேரளாவில் நடைபெற்ற சுதந்திர போராட்டமாக உருவெடுத்து பிறகு பெரிய இனக்கலவரமாக மாறிய மலபார் கலகம் என்கிற மாப்பிள்ளை கலகம். இந்த கலகத்தில் ஏராளமானோர் இறந்தனர். இதனை மையமாக வைத்து மலையாள பட இயக்குனர் அன்வர் ராஷித் என்பவர் இயக்க உள்ளார். இதில் வறியன் குன்னத் குஞ்சாஸமகத் ஹாஜி எனும் சுதந்திர போராட்ட வீரராக நடிக்க உள்ளார் விக்ரம். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கி, 2021இல் வெளியாகும் என தெரிகிறது. 2021 ஆம் ஆண்டு தான் அந்த கலவரம் நடந்து நூறு வருடங்கலாகும் ஆதலால் அப்போது அந்த படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. source : CINEBAR
DINASUVADU