முகத்தில் காயத்துடன் முதியவர் போல் மாறிய சியான் விக்ரம்.! வைரலாகும் வீடியோ…
தங்கலான் படத்திற்காக மேக்கப் போடும் சியான் விக்ரமின் வீடியோ வைரலாகி வருகிறது.
இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடித்து வரும் ‘தங்கலான்’ படத்துக்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ‘தங்கலான்’ படத்தில் நடிகை மாளவிகா மோகனன், பார்வதி திருவோத்து, பசுபதி மற்றும் பலர் நடித்துள்ளனர், மேலும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
கோலார் தங்க வயல் பின்னணியை கதைக்களமாக கொண்டு, பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்டு வரும் இப்படம், இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Thalaivaaaaa….. That Smile#Thangalaan #ChiyaanVikram pic.twitter.com/4DBQx7T7fg
— Chiyaan Naresh (@ChiyaanNaresh) June 28, 2023
இந்த படத்தில் சியான் விக்ரம் 2 கெட்அப்களில் நடிக்கிறாராம். ஒரு கெட்டப் 30 வயது இளமையான தோற்றத்திலும் மற்றொன்று வயதான முதியவர் தோற்றத்திலும் நடிக்கிறார். தற்போது, இணையத்தில் வைரலாகும் வீடியோவில், முதியவர் தோற்றத்திற்கு மேக்கப் போடும் வேலைகள் பற்றியது தான். அவரது முகத்தில் காயம் இருப்பது போல் தெரிகிறது. இது படத்தின் தீவிர ஆக்ஷன் காட்சிகளுக்காக இருக்கலாம்.
படத்தின் EVP ஷெட்யூல் சமீபத்தில் நிறைவடைந்தது. அடுத்த ஷெட்யூல் மதுரையில் ஒரு வாரம் நடக்கவிருக்கிறது, அதனுடன் படம் முடிவடையும் படத்தை அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.