மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, மாதவன் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் விக்ரம் வேதா. இந்த படத்தை புஷ்கர் – காயத்ரி ஆகியோர் இயக்கி இருந்தனர். இப்படத்தின் கதைக்களமும், திரைக்கதையும் இந்திய திரையுலத்தையே கவனிக்க வைத்தது.
unknown nodeதற்போது இந்த படம் பாலிவுட்டில் ரீமேக் ஆக உள்ளது. இக்கதை பல முன்னனி பாலிவுட் ஹீரோக்களிடம் சென்றுள்ளது. முதலில் ஷாரூக்கானிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. மாதவன் ரோலில் நடிக்க படக்குழு பரிந்துரைத்தது. அவர் விஜய் சேதுபதி ரோலில் நடிக்க விருப்பம் தெரிவித்து கதையில் சில மாற்றம் செய்ததால் முரண்பாடு ஏற்பட்டு விலகிவிட்டார்.
பின்னர் ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் சஞ்சய் தத் நடிப்பதாக தகவல் வெளியானது. பின்னர் இந்த தகவல் மறுக்கப்பட்டது. தற்போது வந்த தகவலின் படி, இப்படத்தில் விஜய் சேதுபதி ரோலில் அமீர்கான் நடிக்க உள்ளதாகவும், மாதவன் ரோலில் சையீப் அலி கான் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்தை புஷ்கர் காயத்ரி இயக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.