இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பஹத் பாசில் ஆகியோர் நடிப்பில் கடந்த ஜூன் 3-ஆம் தேதி வெளியான திரைப்படம் “விக்ரம்”. இந்த படத்தை ராஜ் கமல் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார்.
அதிரடி ஆக்சன் காட்சிகளை கொண்ட இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. போதை பொருள் கடத்தலை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. படத்தில் வரும் காட்சிகள், பின்னணி இசை என ரசிகர்களை வெகுவாக ஈர்த்துவிட்டது.
படம் வெளியாகி 25 நாட்கள் மேலாகியும் படத்தை பார்க்க இப்போது வரை மக்கள் கூட்டம் பெண்கள், குழந்தைகள், குடும்பங்கள் என இரவு காட்சியிலும் கூட்டம் கூட்டமாக படத்தை பார்க்க சென்று கொண்டு தான் இருக்கிறார்கள். வசூலிலும் படம் பல சாதனைகளை புடைத்திருந்தது. தமிழகத்தில் மட்டும் படம் 160 கோடிக்கு மேல் வசூல் செய்து புதிய சாதனையை படைத்துள்ளது.
இந்த நிலையில், படம் வெளியான நாளிலிருந்து தற்போது வரை உலகம் முழுவதும் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, படம் உலகம் முழுவதும் 400 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழ் சினிமாவில், அதிகம் வசூல் செய்த படங்களின் பட்டியலில் 2-வது இடத்தை பிடித்துள்ளது.
முதல் இடத்தில் ரஜினி நடிப்பில் வெளியான 2.0 படம் உள்ளது, இரண்டாவது இடத்தில் விஜயின் பிகில் படம் இருந்த நிலையில், தற்போது விக்ரம் படம் 400 கோடி வசூல் செய்து பிகில் படத்தின் வசூலை பின்னுக்கு தள்ளி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…