தீபாவளி என்றாலே புதுப்புது திரைப்படங்கள் வெளியாவது வழக்கம் தான். அந்த வகையில் இந்த ஆண்டு (2023) தீபாவளியை முன்னிட்டு ராகவா லாரன்ஸ் எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ‘ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. அதற்கு முன்னதாக கார்த்தி நடிப்பில் உருவாக்கி உள்ள ஜப்பான் திரைப்படமும் தீபாவளியை முன்னிட்டு ஒரு சில நாட்களுக்கு முன்பு வெளியாகிறது.
இப்படி இரண்டு திரைப்படங்கள் தீபாவளி ரேசில் வரிசை கட்டி நிற்கும் நிலையில், அந்த வரிசையில் விக்ரம் பிரபு நடித்துள்ள ‘ரெய்டு’ திரைப்படமும் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த ‘ரெய்டு’ திரைப்படத்தை பிரபல இயக்குனரான கார்த்தி என்பவர் இயக்கி இருக்கிறார். படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீதிவ்யா நடிக்கிறார்.
Diwali 2023 : தீபாவளிக்கு வரிசை கட்டி நிற்கும் படங்கள்! போட்டியில் குதித்த சீயான் விக்ரம்!
படத்திற்க்கு இசையமைப்பாளர் சாம்சிஎஸ் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வெற்றியை பெற்று இருந்தது. டீசரை பார்த்த பலருக்கும் படத்தின் மீது இருந்த எதிர்பார்ப்பு அதிகமானது என்றே கூறலாம். இதனையடுத்து படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருந்த நிலையில், தற்போது அதற்கான ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ‘ரெய்டு’ திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. ஏற்கனவே தீபாவளிக்கு இரண்டு பெரிய படங்கள் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தைரியமாக ரெய்டு திரைப்படமும் அதே தினத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது என்றால் அதற்கு காரணமே படத்தில் இருக்கும் கதை தான்.
அதைப்போலவே, மற்றோரு காரணம் என்றால் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான இறுக்கப்பற்று கொடுத்த வெற்றி என்று கூறலாம். அந்த அளவிற்கு குடும்பத்துடன் சென்று பார்க்க கூடிய ஒரு அழகான படத்தில் அவர் நடித்திருந்தார். இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வெற்றியை பெற்று வரும் நிலையில், அடுத்ததாக அவருக்கு ரெய்டு திரைப்படம் வெளியாகவுள்ளது.
மெல்போர்ன் : ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட…
சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…
திருவனந்தபுரம் : கேரளாவில் புகழ்பெற்ற இலக்கிய எழுத்தாளர், திரைப்பட திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் என பன்முகதிறமை கொண்ட எம்.டி.வாசுதேவன்…
சென்னை : அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024 போட்டியில் இந்திய இளம் கிராண்ட் மாஸ்டர் குகேஷ்,…
மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி…
சென்னை : சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் இரவு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு…