காவல் துறையாக அதிரடி காட்டும் விக்ரம் பிரபு…’ரெய்டு’ டிரைலர்!

Raid

அறிமுக இயக்குனர் கார்த்தி இயக்கத்தில் நடிகர் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக ஸ்ரீ திவ்யா நடித்துள்ள ‘ரெய்டு’ படம் ஒரு ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ளது.

இந்த திரைப்படம் நவம்பர் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. ட்ரைலரை வைத்து பார்க்கையில், இப்படம், விக்ரம் பிரபுக்கு சினிமாவில் மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்கும் வகையில், ஒரு பாதையை ஏற்படுத்தி தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

ரெய்டு திரைப்படம் சிவராஜ்குமார் மற்றும் தனஞ்சயா நடிப்பில் வெளிவந்து சூப்பர்ஹிட் கன்னடப் படமான டகருவின் அதிகாரப்பூர்வ ரீமேக் ஆகும். இந்தப் படத்தை எஸ்.கே.கனிஷ்க் மற்றும் ஜி.கே.மணிகண்ணன் ஆகியோர் தயாரித்துள்ளனர்.

மேலும் இந்த படத்தில், அனந்திகா, ரிஷி ரித்விக், சௌந்தரராஜா மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். கதிரவன் ஒளிப்பதிவும், மணிமாறனின் படத்தொகுப்பும், கே கணேஷின் சண்டைக்காட்சியும் இடம்பெறும் இப்படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்கிறார்.

நீ முதலில் கிளம்பு! ரத்னகுமார் பேசியதற்கு செம கடுப்பான நடிகர் விஜய்?

இயக்குனர் முத்தையா இந்த படத்துக்கு வசனம் எழுதியுள்ளார். முன்னதாக, விக்ரம் பிரபு மற்றும் ஸ்ரீ திவ்யா ஆகியோர் நடிப்பில் 2014 ஆம் ஆண்டு வெளிவந்த நகைச்சுவைப் படமான வெள்ளக்கார துரை படத்தில் ஜோடியாக நடித்திருந்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live
TN CM MK Stalin
senthil balaji edappadi palanisamy
gold rate
periyar seeman
d jeyakumar about komiyam
Eng T20 captain Jos Buttler - Indian T20 team captain Suryakumar Yadav