ஒட்டு மொத்த சினிமா ரசிகர்களும் அடுத்தாக ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் கமல்ஹாசனின் “விக்ரம்” திரைப்படம் வரும் ஜூன் மாதம் 3-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ள நிலையில், படத்திற்கான ப்ரோமோஷன் பணியில் படக்குழு தீவிரமாக இறங்கியுள்ளது. வரும் மே 15-ஆம் தேதி படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில், இந்த படத்தின் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் ஒளிபரப்பாகும் ஒடிடி உரிமத்தை டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஒடிடி தளம் கைப்பற்றியுள்ளது.படம் திரையரங்குகளில் வெளியான நான்கு வாரங்களுக்கு பிறகு ஓடிடியில் வெளியிட முடிவு செய்துள்ளார்களாம்.
சாட்டிலைட் உரிமத்தை டிவி சேனல்களான ஸ்டார் விஜய் (தமிழ்), ஏசியாநெட் (மலையாளம்), ஸ்டார் நட்சத்திர சுவர்ணா (கன்னடம்), ஸ்டார் கோல்டு (இந்தி) ஸ்டார் மா (தெலுங்கு).
விக்ரம் தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் உரிமம் 125 கோடி இந்திய ரூபாய்க்கு விற்பனை ஆகியுள்ளதாம். படத்தின் பட்ஜெட்டி 100 கோடி எனவும், படம் வெளியாவதற்கு முன்பே 125 கோடி வசூல் செய்துவிட்டது எனவும், அடுத்ததாக திரையரங்குகளில் வெளியான பிறகு அதிலும் வரும் வசூல் படக்குழுவுக்கு கூடுதல் லாபம் கொடுக்கும் எனவும் நெட்டிசன்கள் தெரிவிக்கின்றார்கள்.
டெல்லி : கடந்த பிப்ரவரி 5-ல் நடைபெற்ற டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. காலை முதலே…
ஈரோடு : கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பெறப்பட்ட வாக்குகள் இன்று காலை…
ஷார்ஜா : இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி…
ஜோகன்னஸ்பேர்க் : ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளரும், தற்போதைய மும்பை கேப் டவுன் அணியின் கேப்டனுமான ரஷீத் கான், நெட்ஃபிளிக்ஸில் ஒளிபரப்பப்படும்…
மதுரை : கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தல், ஈரோடு கிழக்கு மற்றும் உ.பியில் மில்கிபூர்…
ஈரோடு : கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர்…