தமிழகம் முழுவதும் வெளியானது விக்ரம்.! FDFS-ஐ வெறித்தனமாக கொண்டாடிய ரசிகர்கள்.!
அணைத்து சினிமா ரசிகர்களும் ஆவலுடன் காத்திருந்த கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது. 4 வருடங்கள் கழித்து கமல்ஹாசனின் திரைப்படம் வெளியானதால் ரசிகர்கள் முதல் நாள் முதல்காட்சியை கொண்டாடி தீர்த்து படத்தை பார்த்து மகிழ்ந்தனர். திரையரங்குகளின் முன்னாள் ஆட்டம், பாட்டம் கமல் போஸ்டருக்கு பால் அபிஷேகம் செய்து கலக்கிவிட்டனர்.
ரசிகர்கள் எதிர்பார்த்ததை போல விக்ரம் படமும் அதிரடி ஆக்சன் காட்சிகளை கொண்டிருந்ததால் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது என்றே கூறலாம். படத்தை பார்த்த ஒவ்வொரு ரசிகர்களும் 4 ஆண்டுகளுக்கு பிறகு ஆண்டவரை பார்க்கிறேன். படம் மிகவும் அருமையாக இருக்கிறது விக்ரம் 3 பார்ட்டுக்கு வெயிட்டிங் என தெரிவித்து வருகிறார்கள்.
விக்ரம் படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் வருவதால் படத்தின் முதல் நாள் வசூல் கண்டிப்பாக தமிழகத்தில் மட்டும் 25 கோடியை தாண்டிவிடும் என தெரிகிறது. இந்த படம் வெளியான முதல் நாள் மட்டும் எத்தனை கோடி வசூலை செய்துள்ளது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். படத்தில் கமலுடன், விஜய் சேதுபதி, பஹத் பாசில், நரேன், ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். படத்தில் நடிகர் சூர்யா கேஸ்ட் ரோலில் நடித்துள்ளார். ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.