நடிகை சிம்ரன் முன்னணி நடிகையாக வளம் வந்துகொண்டு இருந்த காலத்தில் அவருடன் பல நடிகர்கள் நடிக்கவும் நடனம் ஆடவும் விருப்பபட்டது உண்டு. பல நடிகர்களுடன் அவர் ஜோடி சேர்ந்து நடித்து இருந்தாலும் கூட விக்ரம் உடன் இணைந்து 90ஸ் காலகட்டத்தில் நடிக்கவில்லை. அந்த சமயமே விக்ரம் சிம்ரனுடன் படத்தில் நடிக்கவும் நடனம் ஆடவும் விரும்பி இருக்கிறாராம்.
அந்த நேரத்தில் மணிரத்னம், ஷங்கர் இயக்கத்தில் ஒரு படத்திலாவது நடிக்கவேண்டும் என்றும், அதைப்போல சிம்ரன், ரம்பா, ரோஜா ஆகியோருடன் ஒரு படத்திலாவது நடிக்கவேண்டும் என்றும் விக்ரம் ரொம்பவே ஆசைபட்டாராம். இதில் மணிரத்னம் இயக்கத்தில் ராவணன் படத்தில் நடித்தார். அதைப்போல, ஷங்கர் இயக்கத்தில் ஐ படத்தில் நடித்தார்.
இந்த ஆசைகள் நிறைவேறினால் கூட சிம்ரன், ரோஜா ஆகியோருடன் நடிக்கவில்லையே என்கிற வருத்தம் அவருக்கும் மனதில் இருந்ததாம். அந்த ஆசை அந்த காலத்தில் நிறைவேறவில்லை என்றாலும் கூட மகான் படத்தில் நிறைவேறி இருந்தது. மகான் படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக சிம்ரன் தான் நடித்து இருந்தார். ஆனால், சிம்ரனுடன் நடனம் ஆடும் ஆசை பிதாமகன் படத்திலே விக்ரமிற்கு நிறைவேறிவிட்டது.
பிதாமகன் படத்தில் இடம்பெற்று இருந்த தக தகவென ஆடவா பாடலில் சிம்ரனுடன் இணைந்து விக்ரம் செம குத்து டான்ஸ் ஆடி இருப்பார். அந்த பாடல் முழுவதும் அவர் சிம்ரன் உடன் நடனம் ஆடவில்லை என்றாலும் கூட கடைசியில் சில நொடிகள் சிம்ரன் கூட நடனம் ஆடி இருப்பார். அந்த காட்சியில் கூட சிம்ரனுடன் விக்ரம் நடனம் ஆடுவது போல இல்லயாம்.
விக்ரம் ரொம்பவே ஆசைபட்டு கண்டிப்பாக நான் சிம்ரனுடன் நடனம் ஆடியே ஆகவேண்டும் என்று ஆசைப்பட்டு அடம் பிடித்து ஆடினாராம். இந்த தகவலை நடிகர் விக்ரமே சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். பிதாமகன் படத்தில் விக்ரம் மற்றும் சிம்ரன் இருவரும் இணைந்து நடனம் ஆடி இருந்த அந்த பாடல் பலருடைய பேவரைட்டாக இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…