விக்ரமும் விஜய் சேதுபதியும் இணையும் புதிய படத்தின் மாஸ் அப்டேட்.!
விஜய் சேதுபதியும், விக்ரமும் இணைந்து புதிய படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த படத்தை ஒரு மலையாள இயக்குனர் இயக்க அதிக வாய்ப்புள்ளதாம்.
தமிழ் சினிமாவில் மல்டி ஹீரோ சப்ஜெக்ட் (இரண்டு & மூன்று ஹீரோக்கள் ஒன்றாக இணைந்து நடிப்பது) அவ்வப்போது வெளியாகும். அந்த வழக்கம் தற்போது அதிகமாகி உள்ளது. அதற்கு முக்கிய காரணம் தமிழ் சினிமாவில் விஜய் சேதுபதியின் என்ட்ரி தான்.
பெரிய ஹீரோ சின்ன ஹீரோ என பாரபட்சம் பார்க்காமல் நடித்து அந்த குறையை தீர்த்தவர் விஜய் சேதுபதி. ரஜினியுடன் பேட்ட, விஜயுடன் மாஸ்டர், கமல்ஹாசனுடன் விக்ரம் என வரிசைகட்டி உச்ச நட்சத்திரங்களுடன் நடித்து வருகிறார்.
இவர் நடிப்பில் அடுத்தடுத்து புதிய படங்கள் வரிசைகட்டி நிற்கின்றன. தற்போது புதிய செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, மக்கள் செல்வன் விஜய் சேதுபதியும், சீயான் விக்ரமும் இணைந்து ஒரு புதிய படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை போய் கொண்டிருக்கிறதாம்.
இந்த படத்தை ஒரு மலையாள இயக்குனர் இயக்க அதிக வாய்ப்புள்ளதாகவும், ஒரு பெரிய தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க இருப்பதாகவும், விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என் எதிர்பார்க்கப்படுகிறது.