மீண்டும் தனது நடிப்பு திறமையை காட்ட தயாராகும் விக்ரம்! அடுத்த படத்தில் 25 கெட்டப்கள்!

கடாரம் கொண்டான் படத்தினை அடுத்து சியான் விக்ரம் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இவர் இதற்க்கு முன்னர் டிமான்டி காலணி, இமைக்க நொடிகள் ஆகிய திரைப்படங்களை இயக்கி உள்ளார்.
இப்படமும் த்ரில்லர் வகையை சார்ந்து எடுக்கப்பட உள்ளதாம். இப்படத்தில் விக்ரம் 25 வித்தியாசமான கெட்டப்களில் நடிக்க உள்ளாராம். இந்த தகவலை இயக்குனர் அண்மையில் தெரிவித்துள்ளார். இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளார்.