2018 விகடன் விருதுகள் அறிவிப்பு! தனுஷ், விஜய் சேதுபதி, த்ரிஷா என பலருக்கு விருதுகள்!!!
வருடா வருடம் பிரமாண்டமாக விழா எடுத்து கொண்டாப்படும் தமிழ் சினிமா விருது விழா விகடன் விருது விழா. அதன் 2018-ற்கான தமிழ் சினிமா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் யாருக்கெல்லாம் விருது அளிக்கப்பட்டுள்ளது என கீழே காண்போம்.
சிறந்த நடிகராக வடசென்னை படத்தில் அன்புவாக வாழ்ந்த நடிகர் தனுஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிறந்த நடிகையாக 96 படத்தின் மூலம் நமது பள்ளி பருவ நினைவுகளை நம் இதயத்திற்கு கடத்திய நடிகை திரிஷா தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிறந்த படமாக விஜய் சேதுபதி தயாரிப்பில் உருவான மேற்கு தொடர்ச்சி மலை படத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறந்த இயக்குனரான சமகால சாதிய வேறுபாடுகளை அப்பட்டமாக காட்டிய பரியேறும் பெருமாள் படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த இசையமைப்பாளராக வடசென்னை, பரியேறும் பெருமாள், காலா படங்களுக்கு இசையமைத்த சந்தோஷ் நாராயணன் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறந்த வில்லனாக காலா படத்தில் கத்தி ரத்தம் இல்லாமல், தனது உடல் மொழியால் மட்டுமே மிரட்டும் வில்லனாக நடித்த நானா பட்டேக்கரருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த வில்லியாக வரலக்ஷ்மி சரத்குமாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த குணச்சித்திர நடிகராக வடசென்னை படத்தில் கதையின் மைய புள்ளியாக இருந்த ராஜன் கதாபாத்திரத்தை மிக சிறப்பாக கையாண்ட நடிகர் அமீருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறந்த குணச்சித்திர நடிகை ஈஸ்வரி ராவ், சிறந்த காமெடியன் யோகி பாபு, சிறந்த அறிமுக இயக்குனர் லெனின் பாரதி(மேற்கு தொடர்ச்சி மலை), சிறந்த தயாரிப்பாளர் நடிகர் விஜய் சேதுபதி மேற்கு தொடர்ச்சி மலை படத்தை தயாரித்ததற்காக அறிவிக்கப்பட்டார்.
DINASUVADU