தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள சர்கார் படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் படத்தில் நடித்த நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
விஜய் தனது மேடை பேச்சுகளில் எப்போதும் ஓர் குட்டி கதை ஒன்றை கூறுவார். அதேபோல நேற்றும் தளபதி விஜய் பேசுகையில் ஓர் மன்னர் கதையை கூறினார். அதாவது , ஓர் நாட்டில் ஓர் மன்னர் இருந்தார் அவர் ஒரு நாள் சாப்பிடுகையில் உப்பு குறைவாக இருந்தது அப்போது அரண்மனையில் உப்பு இல்லாத காரணத்தால், தனது சிப்பாயை அழைத்து ஊர்மக்களிடம் உப்பு வாங்கிவிட்டு வா. முக்கியமாக அவர்களிடம் அதற்குரிய பணத்தை கொடுத்து வாங்கிவிட்டு வா என கூறினிராம்.
ஏன்என்றால் அரசர் இலவசமாக பொருளை வாங்கினால் அவருக்கு கீழ் வேலை பார்ப்பவர்கள் மன்னரே இலவசமாக வாங்குகிறார் என கூறி ஊரையே கொள்ளையடித்து விடுவார்கள் என கூறி சரியான தலைமை அமைந்தால் எல்லாம் சரியாக இருக்கும் என தனது அரசியல் கருத்தை மறைமுகமாக கூறிவிட்டார்.
மேலும் புழுக்கம் ஏற்பட்டால் அங்கு மழை வரும் அதேபோல இப்போது அதிகமாக கஷ்டப்பட்டால் அந்த கஷ்டத்தில் எழுந்து வருபவனின்ஷகீழ் நடக்கும் சர்கார் நன்றாக இருக்கும் என்று கூறினார்.
DINASUVADU
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…
சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…