அந்த ரெண்டு பேரும் இல்ல…மல்லுவுட் ஹீரோவை செலக்ட் செய்த விஜய் மகன்.!
நடிகர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் விரைவில் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமாகவுள்ளார். ஆனால், அவரது அப்பா விஜய் கமிட்டான ஒரு படத்தை முடித்துவிட்டு சினிமாவை விட்டு விலகி அரசியலுக்கு நுழைகிறார். சமீபத்தில், அரசியல் நுழைவு குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு அடுத்தகட்ட நகர்வுகள் நடைபெற்று வருகிறது.
இவர் இயக்கும் முதல் திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. இந்த திரைப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த ஆண்டு வெளியானது. இருந்தாலும், படத்தில் யார் ஹீரோ? ஹீரோயின் யார் ? படத்திற்கு இசையமைக்கப் போவது யார் என்று எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
ஆனால், முன்னதாக இவர் இயக்கும் படத்தில் ஹீரோவாக முதலில் கவின் நடிக்கிறார் என்றும், பின்னர் துருவ் விக்ரம் நடிக்கிறார் என்றும் தகவல் வெளியானது. தற்பொழுது, அவர்கள் இருவரும் இல்லை என்றும் மலையாள சினிமாவின் இளம் நடிகர் என்று கிசுகிசுக்கப்படுகிறது. அது வேற யாரும்மல்ல ஒரு தகவலின் படி, அது நடிகர் துல்கர் சல்மான் என்று கூறப்படுகிறது.
Jason Sanjay : லைக்கா நிறுவனத்தால் செம கடுப்பான விஜய் மகன்! நடந்தது என்ன தெரியுமா?
ஆம், இறுதியாக நடிகர் துல்கர் சல்மானிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, இதன் படப்பிடிப்பு பூஜை முடிந்ததாக சொல்லப்படுகிறது. அநேகமாக, படத்தின் ஷூட்டிங் ஏப்ரல் அல்லது மார்ச் மாதம் தொடங்கும் என கூறப்படுகிறது. எது என்னவோ, இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.