ThalapathyVijay [FILE IMAGE]
நடிகர் விஜய் தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ThalapathyVijay திரைப்படத்தில் நடித்த வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை சினேகா, மற்றும் மீனாட்சி சவுத்ரி ஆகியோர் நடித்து வருகிறார்கள்.
பிரசாந்த், பிரசன்னா, யோகி பாபு, ஜெய்ராம், மோகன், வத்வா கணேஷ், வைபவ், பிரேம்ஜி உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.
ஜோ திரைப்படம் எப்போது ஓடிடியில் வெளியீடு?
இந்த படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் இரண்டாவது லுக் போஸ்டர் புத்தாண்டை முன்னிட்டு வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று இருந்தது. அதன்பிறகு சமீபத்தில் விஜய் படப்பிடிப்பு தளத்தில் எடுத்துக்கொண்ட ஒரு வீடியோவும் வைரலானது. அந்த வீடியோவில் விஜய்யை பார்க்கவேண்டும் என்ற ஆர்வத்துடன் ரசிகர்கள் தி கோட் படப்பிடிப்புக்கு சென்றார்கள்.
அதனை தொடர்ந்து நேற்றும் விஜய்யை பார்க்க ரசிகர்கள் பலரும் கூட்டமாக சென்று ஷூட்டிங் ஸ்பார்ட் வெளியே நின்று கொண்டு இருந்தார்கள். அவர்களை பார்க்க சென்ற விஜய் ஒரு வேன் ஒன்றின் மீது ஏறிக்கொண்டு ரசிகர்களுடன் செல்பி எடுத்தார். அப்போது விஜய் தி கோட் படத்திற்காக மீசை மற்றும் தாடியை எடுத்துக்கொண்டு இளமையான தோற்றத்தில் இருந்தார்.
இதனை பார்த்த பலரும் இது நடிகர் விஜய்யா? என கேள்விகளை எழுப்பினார்கள். அந்த அளவிற்கு விஜய் மிகவும் வித்தியாசமான கெட்டப்பில் இருந்தார். மேலும் நெட்டிசன்கள் அவருடைய லுக் பற்றி ட்ரோல் செய்தும் வருகிறார்கள். இந்த கெட்டப் தி கோட் படத்தில் இளம் வயது விஜயாக நடிக்கும் கதாபாத்திரத்திற்காக தான் எனவும் கூறப்படுகிறது.
டெல்லி : எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…
வதோதரா : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி0 போட்டிகள், 3 ஒரு…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…