விஜய் படத்துல நடிக்கணுங்கிறது என்னுடைய கனவு! பிரபல நடிகை ஓபன் டாக்!
நடிகை ராசி கண்ணா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவர் சமீபத்தில் வெளியான இமைக்க நொடிகள் படத்தில் நடித்துள்ளார். இப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் விஜய் சேதுபதியின் சங்க தமிழன் படத்தில் நடித்துள்ளார்.
சங்க தமிழன் படத்தில், இவருடன் நிவேதா பெத்துராஜும் நடித்துள்ளார். இதுகுறித்து அவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில், ஒரு கதையில் எனக்கு என்ன முக்கியத்துவம் இருக்குன்னு மட்டும் தான் பார்ப்பேனே தவிர, எத்தனை பேர் நடிக்கிறாங்கன்னு ஜோசிக்க மாட்டேன். விஜய் படத்தில் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய கனவு. அது கண்டிப்பா நடக்கும்ன்னு நம்புறேன். அதுக்காக காத்துக் கொண்டிருக்கிறேன்.’ என கூறியுள்ளார்.