தளபதி விஜய் சினிமா வாழ்க்கையை தாண்டி அடுத்ததாக அரசியலில் கால் பதிக்க ஆர்வம் கொண்டுள்ளதாகவும், அதற்கான நடவடிக்கைகளை தற்போது செய்து வருவதாகவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். தமிழ் சினிமாவின் மோஸ்ட் வான்டட் லிஸ்டில் முதலிடம் இருக்கும் நடிகர் விஜய், கண்டிப்பாக அரசியல் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தனது விஜய் மக்கள் இயக்கத்தினை அரசியல் கட்சிகளாக மாற்றுவாரா இல்லை, தேர்தலின்போது ஒருவருக்கு ஆதரவு தெரிவித்து வாய்ஸ் கொடுப்பாரா? இல்லை வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் இரண்டு தொகுதிகளில் நிற்பாரா? என்று உறுதியாக தெரியவில்லை. ஆனால், அவரது நகர்வுகள் அப்படித்தான் இருக்கின்றது என்று அரசியல் பிரமுகர்களும் சினிமா பிரபலங்களும் தங்கள் கருத்தை முன்வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில், நடிகர் விஜய் சமீப காலமாக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகளையும் மூத்த அரசியல்வாதிகளையும் சந்தித்து, இது குறித்து விவாதித்து வருவதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அவர்களிடம், விஜய் மக்கள் இயக்கம் செய்த தொண்டுகளை காண்பித்துள்ளார். அதற்கு, அரசியலுக்கு வரவேண்டும் என்றால், பணத்தை தண்ணியாக செலவு செய்ய வேண்டும் என்று அறிவுரை கூறியுள்ளனர்.
அரசியலுக்காக மெகா திட்டம்:
அதற்காகவே, தனது அடுத்த படமாக தளபதி 68 திரைப்படத்தில் நடிகர் விஜய் ரூ.200 கோடி சம்பளம் வாங்க உள்ளதாகவும், இனிமேல் வருகின்ற படத்தில் அதுதான் என்றும், வருடத்தில் மூன்று படங்கள் நடிக்க திட்டமிட்டுள்ளார். இந்நிலையில், ஒரு படத்துக்கு ரூ.200 கோடி சம்பளம் விகிதம் வருடம் 3 படம் என்றால் ரூ.600 கோடி ஆகும். இதில், அவர் ரூ.500 கோடி அரசியலுக்காக செலவு செய்வார் என்று மூத்த பத்திரிகையாளர் செய்யார் பாலு இந்த தகவல் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
சினிமாவிலிருந்து விலகும் விஜய்:
தற்போது லியோ படத்தில் நடித்து வரும் தளபதி விஜய், அடுத்த படமான தளபதி 68 படத்துடன் சினிமா விட்டு விலகுவதாகவும், அடுத்தது அரசியலில் கவனம் செலுத்த இருப்பதாகவும் சமீபத்தில் ஒரு தகவல் வேகமாக பரவி வந்தது. ஆனால், ஒரு வருடத்திற்கு ரூ.600 கோடி சம்பளத்தை விட்டுவிட்டு உடனே அரசியலுக்கு வருவார் என்ற தவறை விஜய் செய்யமாட்டார். சினிமாவில் இருந்து நிறைய பேர் அரசியலுக்கு உடனே காணாமல் போனவர்கள் பலர் என்று விஜய்க்கு தெரியும். உடனே, இதனை செயல்படுத்த முடியாவிட்டாலும், 8 வருடங்கள் கழித்து இந்த முடிவை எடுக்கலாம் என செய்யார் பாலு கூறினார்.
சமீபத்தில் விஜய்:
விஜய் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக 10, 12-ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கினார். இதற்க்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்த நிலையில், அந்த நிகழ்வில் ஓட்டுக்கு பணம் வாங்காதீர்கள் என பேசியிருந்தது பலரின் கவனத்தை ஈர்த்தது. மேலும் அவரது பிறந்தநாளில், அவரது ரசிகர்கள் மற்றும் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
ரசிகர்களின் ஆர்வம்:
நடிகர் விஜய் அரசியலுக்கு வரவேண்டும் என அவருடைய ரசிகர்கள் பலர் ஆர்வம் தெரிவித்து வருகிறார்கள். அதனை கருத்தில் கொண்டு சில ரசிகர்கள் நாளைய தமிழகத்தின் முதல்வா என்ற பெயர் பலகையுடன் போஸ்டர்களை ஒட்டி அடிக்கடி பரபரப்பை கிளப்பி வருகிறார்கள்.
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுநர் உரை மீதான விவாதத்தின்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி “நீட் தேர்வை…
சென்னை : சட்டப்பேரவை கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் பதிலுரையாற்றி வருகிறார். அப்போது…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த திங்கள்கிழமை முதல் தொடங்கிய நிலையில், நேற்று ஐந்தாவது நாளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்…
குஜராத் : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது அயர்லாந்துக்கு எதிராக 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட்…
டெல்லி : மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியிருந்த கேம் சேஞ்சர் திரைப்படம் ஜனவரி 10 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஷங்கர்…
சென்னை : நேற்று முன்தினம் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவிய…