வாயில் சிகரெட் உடன் விஜய்யின் போஸ்டர் வெளியீடு.!

VIJAY - NaaReady

நடிகர் விஜய் இன்று தனது 49வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு விஜய்க்கு பிறந்தநாள் பரிசு அளிக்கும் விதமாக நள்ளிரவு 12 மணிக்கு ‘லியோ’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

Leo First Look
Leo First Look [Image source : Twitter/@Dir_Lokesh]

தற்போது, லியோ திரைப்படத்தில் நடிகர் விஜய் பாடிய ‘நா ரெடி’ பாடல் இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாகிறது என்று படக்குழு அறிவித்துள்ளது. இதனை அறிவிக்கும் வகையில், போஸ்டரை ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். அதில், விஜய் வாயில் சிகரெட் பிடிப்பது போல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே, நா ரெடி பாடல் அறிவிக்கும் போஸ்டரிலும் வாயில் சிகரெட் உடன் இருந்ததால் பலர் எதிர்ப்பை தெரிவித்தனர். இப்பொது, அதே போல் அமைந்துள்ளதால் என்ன சர்ச்சை வெடிக்க போகிறது என்று தெரியவில்லை.

LeoFirstSingle
LeoFirstSingle [Image Source : @7screenstudio]

இப்படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த போஸ்டரை விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருகின்றனர். லியோ திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். படத்தை 7 ஸ்க்ரீன் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்