விஜயின் கடைசி படம்! தலைப்புடன் பர்ஸ்ட் லுக் வெளியிட்ட படக்குழு!
விஜயின் 69-வது திரைப்படத்திற்கு ஜனநாயகன் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : விஜயின் கடைசி திரைப்படமான அவருடைய 69-வது படத்தினை இயக்குனர் எச்.வினோத் இயக்கி வருகிறார். இந்த படத்தில் நடித்து முடித்த பிறகு விஜய் அரசியல் பயணத்தில் இறங்கவுள்ள காரணத்தால் கண்டிப்பாக கடைசி படத்தில் அரசியல் சார்ந்த விஷயங்கள் அதிகமாக இருக்கும் என முன்னதாகவே கூறப்பட்டிருந்தது. எச்.வினோத்தும் கொஞ்சம் அரசியல் படத்தில் இருக்கும் என கூறியிருந்தார்.
இதுவரை படத்தின் தலைப்பு என்னவென்று அறிவிக்கப்படாமல் இருந்த நிலையில், இன்று குடியரசு தினவிழாவை முன்னிட்டு படத்தின் பெயர் என்னவென்பது குறித்து படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, விஜயின் 69-வது படத்திற்கு “ஜனநாயகன்” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. நெய்வேலியில் ரசிகர்களுக்கு மத்தியில் எடுத்த செல்ஃபி பாணியிலான புகைப்படத்தை போல பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரெடி செய்யப்பட்டிருக்கிறது.
அதில் ரசிகர்கள் விஜயை பார்த்து தங்களுடைய அன்பை வெளிப்படுத்தி இருந்தார்கள். ஆனால், இந்த போஸ்டரில் விஜய் தொண்டர்களாக கீழே மக்கள் அவரை பார்த்து அவருக்கு ஆதரவு தெரிவிப்பது போல காட்டப்பட்டுள்ளது. அத்துடன் படத்திற்கு ஜனநாயகன் என தலைப்பு வைக்கப்பட்டுள்ள காரணத்தால் நிச்சயமாக படம் அரசியல் படமாக தான் இருக்கும் எனவும் தெரிய வந்துள்ளது.
#JanaNayagan pic.twitter.com/cs51UDEi1Q
— Vijay (@actorvijay) January 26, 2025