விஜய்யின் கடைசி படம்… குடியரசு தினத்தன்று வெளியாகிறது ‘தளபதி 69’ ஃபர்ஸ்ட் லுக்!

H.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தின் முதல் பார்வை போஸ்டர் ஜன.26ல் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

THALAPATHY 69

சென்னை : விஜய்யின் கடைசி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஜன.26ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. விஜய் முழுமையாக அரசியலில் நுழைவதற்கு முன்பாகவே விஜய்யின் கடைசிப் படம் என்று கூறப்பட்டு, எச்.வினோத் இயக்கிய தளபதி 69 படத்தின் அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

இயக்குநர் எச்.வினோத் இயக்கும் இப்படம் அரசியல் இல்லாமல், கமர்ஷியல் கதை களத்தில் உருவாகுவதாக கூறப்பட்டது. ஆனால், படக்குழு வெளியிட்டுள்ள புதிய போஸ்டரில் “தலைவா” படத்தில் விஜய் வருவதுபோன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. இதனால், கடைசி படம் அதிரடி அரசியல் படமா? என தெரிய வருகிறது.

இந்த படத்திற்கு விஜய் நடித்த முதல் படத்தின் தலைப்பாக “நாளைய தீர்ப்பு” என்று பெயரிடப்படும் என்று சமூக வலைதங்களில் ஒரு வதந்தி பரவி வருகின்றன. படத்தில் விஜய்யைத் தவிர, பாபி தியோல், பூஜா ஹெக்டே மற்றும் நரேன் ஆகியோருடன் பிரகாஷ் ராஜ், கவுதம் வாசுதேவ் மேனன், பிரியாமணி, மமிதா பைஜு மற்றும் டீஜே அருணாசலம் ஆகியோரும் நடிக்கின்றனர்.

இதில், பாலிவுட் நடிகர் பாபி தியோல், நடிகை ப்ரியாமணி, மமிதா, நரேன் ஆகியோர் விஜய்யுடன் முதன்முறையாக இந்த  திரைப்படத்தில் இணைந்து நடிக்கிறார்கள். படத்தின் கதைக்களம் குறித்த கூடுதல் விவரங்களை தயாரிப்பாளர்கள் இன்னும் அறிவிக்கவில்லை.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்