2026-ல் எண்டு கார்டு போட்ட விஜய்.! ஜன நாயகனுக்கு தேதியை குறித்த படக்குழு.!

விஜய்யின் கடைசி படமான 'ஜனநாயகன்', 2026ம் ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி (ஜன. 9) வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது

janaNayagan - Vijay

சென்னை : நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின்  தலைவருமான விஜய், தன்னுடய கடைசி திரைப்படமான “ஜனநாயகன்” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடித்து முடித்த பிறகு சினிமாவை விட்டு விலகி முழுவதுமாக அரசியல் பயணத்தில் ஈடுபடவிருக்கிறார். எனவே, அவருடைய கடைசி திரைப்படம் மீது எதிர்பார்ப்புகள் அதிகமாக நிலவியுள்ள நிலையில், இப்படம் 2026ம் ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி (ஜன. 9) வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி பட்டையை கிளப்பிய நிலையில், ரிலீஸ் அறிவிப்பை படக்குழு போஸ்டர் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ‘ஜன நாயகன்’ திரைப்படம் 2026 பொங்கல் வெளியீட்டிற்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் இந்த ஆண்டு (2025 )அக்டோபரில் வெளியாகவிருந்த இந்தப் படம், விஜய்யை ஒரு அரசியல் சார்ந்த கதாபாத்திரத்தில் காட்டுவதாக இருப்பதால், படம் 2026 தேர்தலுக்கு முன்னதாக பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில், ரிலீஸ் பொங்கல் பண்டிகைக்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் விஜய்யுடன் பாலிவுட் நடிகர் பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியாமணி, கௌதம் வாசுதேவ் மேனன், நரேன் மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்த இந்த படத்திற்கு, சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய, பிலோமின் ராஜ் படத்தொகுப்பை செய்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்