விஜய் தலையில் விக்.? மண்டைக்குள்ள சரக்கு இருக்கானு பாருங்க – கொந்தளித்த மீசை ராஜேந்திரன்.!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், ‘லியோ’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆரம்பத்தில் காஷ்மீரில் லியோ படப்பிடிப்பு நடத்தி முடித்துவிட்டு, தற்போது சென்னையில் தொடர்ந்து படப்பிடிப்பு நடந்து வருகிறது.
நடிகர் விஜய்க்கு தலை முடி உதிர்ந்து விட்டதால் தான் அவர் விக் பயன்படுத்தி வருவதாகவும், ஒவ்வொரு நாளும் தோப்பாவை விதவிதமாக மாற்றி மாற்றி வருகிறார் என்று அண்மைய காலமாக ஒரு சர்ச்சை பேச்சுக்கள் இணையதளத்தில் உலா வருகிறது. இதனை, தளபதி விஜய் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து பேசி வருகிறார்கள்.
அந்த வகையில், பிரபல நடிகர் மீசை ராஜேந்திரனிடம் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் தளபதி விஜய் தலையில் விக் இருக்கிறதா? இல்லையா? என்ற கேள்வி கேட்கப்பட்டது. உடனே, அதற்கு பதிலளித்த மீசை ராஜேந்திரன் தலையில் முடி இருக்கா? விக் இருக்கானு பாக்காதீங்க முதலில் அவர் மண்டையில் சரக்கு இருக்கு இருக்கிறது அதை பாருங்கள்… அதனால் தான் அவர் இந்த இடத்தில இருக்கிறார் என்று கடுமையாக சாடினார்.
இந்த வயதில் முடி கொட்டுவதும், சினிமாவில் நடிப்பதற்காக பல்வேறு இடங்களுக்கு சேலை வேண்டியது இருக்கும், அங்கு தண்ணீர் எல்லாம் மாறுபடும், ஷூட்டிங்காக பயன்படுத்தப்படம் லைட்ஸ் எல்லாமே தாங்க வேண்டும். முடி இல்லாமல் எத்தனை நடிகர்கள் சினிமாவில் சாதித்து வருகிறார்கள். இதனால், அவருக்கு முடி இல்லை அது இல்ல இது இல்லனு பாக்க கூடாது. இந்த மாதிரி பேசுறதெல்லாம் தப்பு என்று தெரிவித்திருப்பார்.