விஜய்யின் கல்வி விருது விழா.! படையெடுத்த மாணவ மாணவிகள்.! சுடச்சுட ரெடியாகும் மதிய உணவு.!
விஜய்யின் கல்வி விருது விழாவில் மாணவர்களுக்காக தயாராகும் அறுசுவை உணவு.
நடிகர் விஜய், இன்று 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ்நாடு முழுவதும் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு, அவர்களது பெற்றோர்கள் முன்னிலையில் நடிகர் விஜய் சான்றிதழ்கள் மற்றும் ஊக்கத்தொகை வழங்குக்கிறார்.
மேலும் மாணவ, மாணவிகளுக்கு மரியாதை செய்யும் வகையில், சால்வை அணிவித்து விஜய் மக்கள் இயக்கம் சார்பாக அவரது கையொப்பமிட்ட சான்றிதழ் மற்றும் 10 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்னும் சற்று நேரத்தில் விழா தொடங்கவுள்ள நிலையில், நீலாங்கரை வீட்டில் இருந்து அரங்கத்திற்கு நடிகர் விஜய் புறப்பட உள்ளார். சென்னை, நீலாங்கரையில் நடைபெறும் விஜயின் கல்வி விருது விழாவுக்கு திரளான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
Sets Are Ready ????
Waiting For Anna Blessing ❤️????Tag:#VIJAYHonorsStudents#ThalapathyVijay #Leo pic.twitter.com/tqU0l1XB35
— C R⚡️ (@RoastBiggy) June 17, 2023
முதல் முறையாக மாணவர்களை நடிகர் விஜய் சந்திக்கவுள்ள நிலையில், சுடச்சுட மதிய உணவு தயராகி வருகிறது. விழா நடக்கும் தனியார் அரங்கில் அசைவம் சமைக்க அனுமதியில்லை என்பதால் சைவ விருந்து என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இந்த விருது வழங்கும் விழாவுக்காக மேடை பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. அதில், நடிகர் விஜய் தனது ‘குட்டி ஸ்டோரி’ எடுத்து விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து, நடிகர் விஜய் மாணவ – மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கி அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளப் போகிறார்.