கோட் : நாளை நடிகர் விஜயின் 50-வது பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடித்து வரும் ‘கோட்’ படத்தின் அப்டேட்டுகளை படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் இந்த ‘கோட்’ படத்தில் மீனாட்சி சௌத்ரி, மாளவிகா சர்மா, மாளவிகா சர்மா, மோகன், அஜ்மல் அமீர், பிரபுதேவா, சினேகா பிரசன்னா, யோகி பாபு, லைலா, வத்வா கணேஷ், உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார்கள்.
படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். ஏற்கனவே, படத்தின் மூன்று லுக் போஸ்டர்கள் மற்றும் முதல் பாடலான ‘விசில் போடு’ பாடல் வெளியாகிவிட்டது. அதனை தொடர்ந்து , அடுத்த அப்டேட்டாக நாளை மாலை 6 மணிக்கு விஜய் பிறந்த நாளை முன்னிட்டு படத்தின் இரண்டாவது பாடலான ‘சின்ன சின்ன கண்கள்’ பாடல் வெளியாகும் என முன்னதாகவே அறிவிக்கப்பட்டு இருந்தது.
அந்த பாடலையும் நடிகர் விஜய் தான் பாடி இருக்கிறார் எனவும் முதல் அப்டேட்டில் தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, அந்த பாடலுக்கான சின்ன ப்ரோமோ வீடியோ ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது. வீடியோவில் விஜயின் குரலும், மறைந்த பாடகி பவதாரிணி பாடுவதும் இடம்பெற்றுள்ளது.
விஜயின் பிறந்த நாளைமுன்னிட்டு பாடல் வெளியாகவுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும், கோட் படம் வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…
சென்னை: 'ஒரே நாடு ஒரே தேர்தல்' மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன்ராம் மெக்வால் மக்களவையில் நேற்று அறிமுகம் செய்தார்.…
மதுரை : பெண் காவலர்கள் பற்றி அவதூறாக பேசியதாக யூ-டியூபர் சவுக்கு சங்கரை கடந்த மே மாதம் கோவை போலீசார்…