மீண்டும் களமிறங்கும் கேப்டன் விஜயகாந்த்.! ஷூட்டிங் எப்போது தெரியுமா.?
கேப்டன் விஜயகாந்த் முக்கிய வேடத்தில் விஜய் ஆண்டனியின் மழை பிடிக்காத மனிதன் படத்தில் நடிக்க உள்ளாராம். ஜனவரியில் அதன் ஷூட்டிங் இருக்கும் என கூறப்படுகிறது.
ஒரு காலத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் எனும் ஜாம்பவான்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர் கேப்டன் விஜயகாந்த். இவரது படங்கள் குடும்பத்துடன் அனைவரும் வந்து பார்க்கும்படியாக ஆக்சன் கமர்சியல் படங்களாக இருக்கும். அடுத்தடுத்து, அரசியல், பிறகு உடல்நிலை சரியில்லாமல் போனதால், நடிக்க முடியாமல் நீண்ட இடைவெளி விட்டுவிட்டார் நம்ம கேப்டன்.
தற்போது மீண்டும் திரையில் களமிறங்க கதை கேட்டுள்ளாராம். விஜய் ஆண்டனி நடிப்பில் அடுத்து உருவாகி வரும் திரைப்படம் மழை பிடிக்காத மனிதன். இந்த படத்தை விஜய் மில்டன் இயக்கி வருகிறார்.
இந்த படத்தில் கொஞ்ச நேரம் மட்டும் வரும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க படக்குழு விஜயகாந்தை அணுகியுள்ளது. அவரும் கதை கேட்டு பிடித்துப்போக ஓகே சொல்லிவிட்டாராம்.
விஜயகாந்தின் குடும்பத்தினர் மட்டும், அவரது உடல்நிலை கருத்தில் கொண்டு சற்று பின்வாங்கியுள்ளனர். பின்னர், படக்குழு, நாங்கள் கேப்டன் வீட்டிலேயே ஷூட்டிங் வைத்து கொள்கிறோம். அதிகமாக ஆட்கள் வரமாட்டோம். என கூறி அவர்களையும் சம்மதிக்க வைத்துள்ளாராம்.
இந்த ஷூட்டிங் அநேகமாக ஜனவரியில் தொடங்கும் என கூறப்படுகிறது. ஜனவரியில் ஷூட்டிங் தொடங்கியதும் கண்டிப்பாக கேப்டனின் ரசிகர்கள் தங்கள் தலைவரை நீண்ட நாட்கள் கழித்து திரையில் எப்போது பார்க்கப்போகிறோம் என எதிர்நோக்கி காத்துக்கிடக்கப்போகிறார்கள்.