நடிகர் சங்க கட்டத்திற்கு விஜயகாந்த் பெயர் – விஷால் !

Vijayakanth - Vishal

தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் (71) உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 28-ஆம் தேதி காலை காலமானார். தேமுதிக கட்சி தலைமை அலுவலகத்தில் கேப்டன் விஜயகாந்தின் உடல் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

விஜயகாந்த் நினைவிடத்தில் இறுதி அஞ்சலி செலுத்த முடியமால் போன, நடிர்கள் பலரும் வருகை தந்து அஞ்சலி செலுத்திவருகிறார்கள். அந்த வகையில், இன்று விஜயகாந்த் நினைவிடத்தில் நடிகர் விஷால், ஆர்யா கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். அஞ்சலி செலுத்திய பின் நடிகர்கள் விஷால், ஆர்யா பொதுமக்களுக்கு உணவு வழங்கினர்.

வெளிநாட்டிலிருந்து இன்று சென்னை திரும்பிய விஷால் காலை 11 மணியளவில்  கேப்டன் விஜயகாந்தின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பிறகு, நடிகர் விஷால் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில், விஜயகாந்த் அண்ணன் ஒரு சாமி, நல்ல மனிதர், தைரியமான அரசியல்வாதி ஒருவர் மறைந்த பிறகுதான் சாமி என்று அழைப்பார்கள். ஆனால், கேப்டன் உயிருடன் இருக்கும்போதே மக்கள் அவரை சாமி என்று அழைத்தார்கள் என்று கூறினார.

மேலும் அவர் பேசுகையில், தென்னிந்திய நடிகர் சங்க கட்டத்திற்கு விஜயகாந்த் பெயரை வைப்பது குறித்து பரிசீலனை செய்யப்பட்டு, நடிகர் சங்க கட்டடத்தில் விஜயகாந்த் பெயரும் இடம்பெறும் என்று தெரிவித்தார். விஜயகாந்த்துக்கு நடிகர் சங்கம் சார்பில் இறுதி அஞ்சலி கண்டிப்பாக நடந்திருக்க வேண்டும். இதனால்,விஜயகாந்த்துக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக 19ஆம் தேதி சென்னையில் கூட்டம் நடைபெறும் என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

நடிகர் சங்கம் சார்பில் கேப்டன் விஜயகாந்துக்கு இரங்கல் கூட்டம் அறிவிப்பு!

முன்னதாக, விஜயகாந்தின் நினைவிடத்தில் நடிகர் கார்த்தி மற்றும் அவரது தந்தை சிவக்குமார் ஆகியோர் மலர்தூவி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில், விஜயகாந்த் புகழ் நிலைத்து நிற்கும் வகையில் அறிவிப்பு வெளியாகும் எனவும் கூறினார். தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் ஜனவரி 19ம் தேதி கேப்டன் விஜயகாந்திற்கு இரங்கல் கூட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்