Categories: சினிமா

கேப்டன் விஜயகாந்த் நினைவேந்தல்…உருக்கமாக பேசிய பிரபலங்கள்!

Published by
பால முருகன்

நடிகராகவும், அரசியல் தலைவராகவும் மக்கள் மனதில் பெரிய இடத்தை பிடித்தவர் கேப்டன் விஜயகாந்த். இவர் கடந்த சில ஆண்டுகளாக உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் 28-ஆம் தேதி  காலமானார். இவருடைய மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இவருடைய மறைவுக்கு மக்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள், திரைபிரபலங்கள் பலரும் நேரில் சென்று கண்ணீர் மல்க தங்களுடைய அஞ்சலியை  செலுத்தினர்.  நேரில் வரமுடியாத பிரபலங்கள் பலரும் கேப்டனின் நினைவிடத்திற்கு வருகை தந்து தங்களுடைய மரியாதையையும் செலுத்தி வருகிறார்கள். இந்நிலையில், கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு நடிகர் சங்கம் சார்பில் இரங்கல்  கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டது.

நான் பாஜகவில் இணைந்துவிட்டேனா,? பிரதமரை சந்தித்த பின் அர்ஜுன் பேட்டி.!

அதன்படி, நேற்று ஜனவரி ( 19) சென்னை காமராஜர் அரங்கத்தில் விஜயகாந்தின் மறைவுக்கு இரங்கல் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொள்ள நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என பலரும் அழைக்கப்பட்டு இருந்தார்கள். இந்த இரங்கல் கூட்டத்திற்கு விஷால், ராதா ரவி, மன்சூர் அலிகான், சரத்குமார், எம்.எஸ்.பாஸ்கர் , கமல்ஹாசன், கருணாஸ், ஆர்கே செல்வமணி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டார்கள்.

இதில் பங்கேற்று கேப்டன் விஜயகாந்த் குறித்து தங்களது நினைவுகளை பகிர்ந்துகொண்டனர். குறிப்பாக கமல்ஹாசன், விஷால், கருணாஸ், ஆகியோர் கண்கலங்கி விஜயகாந்த் பற்றி பேசினார். அதனை போலவே, விஜயகாந்தின் மகன்கள் விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் ஆகியோரும் மேடையில் கண்ணீர் மல்க பேசினார்கள்.

Recent Posts

திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து தினந்தோறும் படுகொலைகள்…அண்ணாமலை ஆவேசம்!

சென்னை : சேலம் மாவட்ட சரித்திர பதிவேடு குற்றவாளி ரவுடி ஜான் எனும் சாணக்யாவை மர்ம கும்பல் ஒன்று இன்று அவரது…

6 hours ago

மங்களகரமா பாட்டுல ஆரம்பிக்கிறோம்! வாடிவாசல் படத்தின் தரமான அப்டேட்!

சென்னை : சூர்யா ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் தனியாக ஒரு படத்தில் நடிக்க எந்த அளவுக்கு எதிர்பார்ப்பு இருக்கிறதோ அதே அளவுக்கு அவர்…

7 hours ago

சுனிதா வில்லியம்ஸுக்கு பாரத ரத்னா கொடுங்க! முதல்வர் மம்தா பானர்ஜி வேண்டுகோள்!

மேற்கு வங்கம் : ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஆய்வு பணிகளுக்காக இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி…

8 hours ago

பஞ்சாப் ரொம்ப உக்கிரமா இருப்போம்! எதிரணிக்கு எச்சரிக்கை விட்ட பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்!

பஞ்சாப் : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ள நிலையில், போட்டியில் விளையாடும் அணிகள்…

9 hours ago

இந்த வருஷம் ஒன்னில்ல.., மொத்தம் 13.! களைகட்டும் ஐபிஎல் திருவிழா!

டெல்லி : இந்த வருட ஐபிஎல் (IPL 2025) திருவிழா வரும் மார்ச் 22ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன்…

9 hours ago

வானதி சீனிவாசன் கேட்ட கேள்வி…அண்ணாமலையை சீண்டி பதிலடி கொடுத்த அமைச்சர் செந்தில் பாலாஜி..!

சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி…

10 hours ago