பயந்து நடுங்கிய மீசை ராஜேந்திரன் மகள்.. கேப்டன் விஜயகாந்த் சொன்ன அந்த வார்த்தை?
Vijayakanth : மீசை ராஜேந்திரன் மகள் பயந்தபோது கேப்டன் விஜயகாந்த் சொன்ன வார்த்தை பலரையும் நெகிழ வைத்துள்ளது.
கேப்டன் விஜயகாந்த் எந்த அளவிற்கு நல்ல மனிதர் என்பதனை பற்றி சொல்லியே தெரியவேண்டாம். அவர் இந்த மண்ணில் இல்லை என்றாலும் கூட அவர் செய்த உதவிகள் எல்லாம் அவருடைய எண்ணத்தை நிலைநாட்டியே வைத்து இருக்கும். விஜயகாந்த் செய்த பல நெகிழ்ச்சியான விஷயங்களை பற்றி பல பிரபலங்கள் பேட்டிகளில் சொல்லும் போதே நமக்கு கண்கலங்கிவிடும்.
அந்த வகையில், விஜயகாந்துடன் பல படங்களில் பணியாற்றி அவருடனே பயணித்த பிரபல நடிகரான மீசை ராஜேந்திரன் சமீபத்திய பேட்டி ஒன்றில் விஜயகாந்த் தன்னுடைய மகளிடம் கூறிய விஷயம் ஒன்றை கண்கலங்கி கூறியுள்ளார். இது குறித்து பேசிய மீசை ராஜேந்திரன் ” ஒரு முறை நான் கேப்டன் விஜயகாந்தை சந்திக்க என்னுடைய மகளை அழைத்து சென்று இருந்தேன்.
அந்த சமயம் என்னுடைய மகள் 7-ஆம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்தாள். அவளை பள்ளிக்கூடம் விட நான் தான் போகவேண்டும். எனவே ஒரு முறை கேப்டனை பார்க்க அவள் ஆசைப்பட்டார் உடனடியாக நான் கேப்டன் கிட்ட என்னுடைய பொண்ணை கூப்பிட்டு போனேன். அவர் நிறைய வெளிநாட்டு பிஸ்கட்கள் அள்ளி கொடுத்தார்.
என்னுடைய மகளும் வாங்கி கொண்டு சாப்பிட்டு கொண்டு இருந்தார். பிறகு கேப்டனை பார்த்து மாமா என்னுடைய அப்பா கலைஞர் தாத்தா ஜெயலலிதா ஆண்டியை பார்த்து திட்டி பேசுகிறார். எனக்கு ரொம்பவே பயமாக இருக்கிறது என்று கூறினார். அதற்கு விஜயகாந்த் பயப்படாத மாமா இருக்கிறேன். நீ எதற்காக பயப்புடுகிறாய்? என்று கேட்டார்.
இந்த மாதிரி எல்லாம் அவர் சொல்லவேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை இந்த மாதிரி யாரு?சொல்லுவா ரொம்ப நல்ல மனிதர் அவரை போல ஒரு மனிதரை நான் உலகத்தில் பார்த்ததே இல்லை கேப்டனை நான் ரொம்பவே மிஸ் பண்றேன். இனிமேல் அவரை போல ஒரு தலைவரை யாருமே பார்க்க முடியாது” எனவும் மீசை ராஜேந்திரன் கண்ணீருடன் பேசியுள்ளார்.