ரஜினிக்கு வில்லனாக ‘முரட்டுக்காளை’ படத்தில் நடிக்க மறுத்த விஜயகாந்த்! காரணம் என்ன தெரியுமா?
ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 1980-ஆம் ஆண்டு வெளியான முரட்டுக்காளை படத்தை யாராலும் மறக்கவே முடியாது என்றே கூறலாம். இந்த திரைப்படம் அந்த அளவிற்கு ரஜினிக்கு ஸ்பெஷலான திரைப்படம் இந்த படத்தில் முழுக்க முழுக்க ஒரு கிராமத்து மனிதராக நடிகர் ரஜினிகாந்த் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிகர் ஜெய ஷங்கர் நடித்திருப்பார்.
ஆனால், ஜெய ஷங்கர் நடிக்கவேண்டிய கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்ததே நடிகர் விஜயகாந்த்தானாம். முதலில் படத்தின் கதையை அவரிடம் கூறி நீங்கள் ரஜினிக்கு வில்லனாக நடிக்கிறீர்கள் என்று படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஏவிஎம் பேசினார்களாம். அதற்கு விஜயகாந்தும் சம்மதம் தெரிவித்தாராம்.
பிறகு விஜயகாந்திற்கு 3 லட்சம் சம்பளம் பேசப்பட்டு 50,000 ரூபாய் அட்டவான்ஸாக கொடுக்கப்பட்டதாம். பிறகு இந்த தகவலை தயாரிப்பாளரும், விஜயகாந்தின் நெருங்கிய நண்பருமான ஏ.எஸ்.இப்ராகிம் ராவுத்தருக்கு தெரிய வர உடனடியாக விஜயகாந்திற்கு போன் செய்து என்ன நீ உன்னை ஹீரோவாக நடிக்க நான் இங்கு ஊட்டியில் வாய்ப்பு கேட்டுக்கொண்டு இருக்கிறேன்.
நீ எதற்காக வில்லனாக நடிக்க ஒப்புக்கொண்டாய்? வில்லனாக எல்லாம் நடிக்க கூடாது நீ நடித்தால் ஹீரோவாக தான் நடிக்கவேண்டும் என கூறினாராம். ஏனென்றால், விஜயகாந்த் முரட்டுக்காளை படத்தில் நடிக்க கமிட் ஆக சில நாட்களுக்கு முன்பு தான் ஏ.எஸ்.இப்ராகிம் ராவுத்தர் இருவரும் சென்னைக்கு சென்று உன்னை வைத்து ஒரு படம் எடுப்போம் அந்த படம் தோல்வி அடைந்தாள் நான் திரும்பி வந்திடலாம் என கூறியிருந்தாராம்.
எனவே, திடீரென சொல்லாமல் கொள்ளாமல் விஜயகாந்த் முரட்டுக்காளை படத்தில் நடிக்க கமிட் ஆன காரணத்தால் ஏ.எஸ்.இப்ராகிம் ராவுத்தர் சற்று அதிர்ச்சியாகி நீ பணத்தை திருப்பி கொடுத்துவிட்டு கிளம்பி ஊட்டிக்கு வா என்று கூறிவிட்டாராம். பிறகு விஜயகாந்த் படத்தில் நடிக்க அட்வான்ஸ் தொகையை திருப்பி கொடுத்துவிட்டு படத்தில் நடிக்கவில்லை என்று கூறிவிட்டாராம்.
ஏவிஎம் கொடுத்த 50-ஆயிரத்தில் 10-ஆயிரத்தை செலவு செய்துவிட்டு 40-ஆயிரத்தை மட்டும் திருப்பி கொடுத்துவிட்டு படத்தில் இருந்து விலகி கொள்கிறேன் என விஜயகாந்த் கூறிவிட்டாராம். இந்த தகவலை பத்திரிகையாளர் பாண்டியன் என்பவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். மேலும், விஜயகாந்த் படத்தில் இருந்து விலகிய பிறகு படத்தில் ஜெய சங்கர் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.