கடனில் இருந்து மீட்ட விஜயகாந்த்! அந்த மனிதரை இதுவரை ஒரு முறை கூட நேரில் சந்திக்காத விஜய்?

Published by
பால முருகன்

நடிகர் விஜய் நாளைய தீர்ப்பு படத்தில் நடித்து முடித்து படம் வெளியான பிறகு படம் தோல்வி அடைந்ததால் 40 லட்சம் கடன் வந்ததாகவும், இதனால் வீட்டை விற்கும் அளவிற்கு  நிலைமை வந்தது எனவும், பிறகு அவருக்கு செந்தூரபாண்டி படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தது விஜயகாந்த்  அவரை ஒரு முறை கூட வீட்டிற்கு வந்து விஜய் பார்த்தது இல்லை என  நடிகர் மீசை ராஜேந்திரன் சமீபத்திய பேட்டி ஒன்றில் வருத்தத்துடன்  தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய மீசை ராஜேந்திரன் ” ஒரு முறை என்னிடம் விஜய் சார் சொன்னார் நான் இந்த அளவிற்கு இப்போது இருக்கிறேன் என்றால் அதற்கு காரணம் கேப்டன் தான். ஏனென்றால், நான் நடித்த நாளைய தீர்ப்பு திரைப்படம் சரியாக ஓடவில்லை. எங்களுக்கு கடன் ஆகிப்போச்சு 40 லட்சம் கடன் ஆகிவிட்டது என்று விஜய் என்னிடம் சொன்னது.

சென்னையில் எங்களுக்கு ஒரு வீடு இருக்கிறது. ஒன்னு அந்த வீட்டை விற்று கடன் அடைக்கவேண்டும். இல்லை என்றால் ஒரு படம் செய்துவிட்டு அதில் வரும் லாபத்தில் கடனை அடைக்கவேண்டும்” என விஜய் என்னிடம் கூறினார். அந்த சமயம் கேப்டன் விஜயகாந்த் நடித்த கேப்டன் பிரபாகரன் திரைப்படம் நன்றாக ஓடிக்கொண்டு இருந்தது.

அந்த சமயத்தில் விஜயின் தந்தை செந்தூரப்பாண்டி  படத்திற்காக தேதி கேட்டுள்ளார். பிறகு விஜயகாந்த் நீங்கள் என்ன தேதி வேணும் என்று கேட்டாலும் கொடுக்கிறேன் என கூறிவிட்டு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். அந்த படத்தில் நடித்த பிறகு தான் விஜய் பட்டிதொட்டி எல்லாம் மிகவும் பிரபலமாகிவிட்டார். கேப்டன் பிரபாகரன் படத்தில் நடித்தபோது விஜயகாந்தின் மார்க்கெட் மிகவும் உச்சத்தில் இருந்தது.

அப்படி இருந்த தருணத்தில் செந்தூரபாண்டியன் எனும் சண்டைக்காட்சியை இல்லாத படத்தில் விஜயகாந்த் நடித்து கொடுத்தது எல்லாம் மிகப்பெரிய விஷயம். விஜய் சாரை கடந்த  சில மாதங்களுக்கு முன்பு நான் ஹைதராபாத்தில் பார்த்தேன் அதற்கும் முன்பு பைரவா படத்தின் படப்பிடிப்பில் பார்த்தேன் எங்கு பார்த்தலும் என்னிடம் அவர் கேப்டன் எப்படி இருக்கிறார்? என்று கேட்டு விடுவார்.

ஆனால், விஜய் சார் கேட்கமட்டும் தான் செய்தார் நேரில் வந்து ஒரு முறை கூட அவரை பார்க்கவில்லை. எனக்கு உள்ளுக்குள் அந்த வருத்தம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கிறது. என்னிடம் கேப்டன் எனக்கு உதவி செய்து இருக்கிறார் என விஜய்யே சொல்லியிருக்கிறார் ஒருமுறை நேரில் வந்து பார்க்கலாமே? ரஜினி சார், சத்யராஜ் சார் என பலரும் பார்த்தார்கள். விஜய்யும் பார்த்திருக்கலாம் என்ற வருத்தம் தான் எனக்கு” எனவும் நடிகர் மீசை ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்த தகவலை பார்த்த நெட்டிசன்கள் விஜய்க்கு பெரிய அளவில் பிரபலமாக வாய்ப்பு கிடைத்த படம் செந்தூரப்பாண்டி  அந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்து உதவிய  விஜயகாந்தை ஒரு முறை கூட நேரில் பார்க்கவில்லையா? என வருத்தத்துடன் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Published by
பால முருகன்

Recent Posts

சர்ச்சைக்குள்ளான வக்ஃபு சட்டத் திருத்த மசோதாவுக்கு திரெளபதி முர்மு ஒப்புதல்.!

டெல்லி : வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக,…

17 minutes ago

பாம்பன் புதிய ரயில்வே பாலம் இன்று திறப்பு: சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

ராமேஸ்வரம் : புதிய பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார். பாம்பன் ரயில் பாலத்தின் கட்டுமானப்…

38 minutes ago

PBKS vs RR : பஞ்சாபை பந்தாடிய ராஜஸ்தான்! 50 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சண்டிகர் : இன்றைய ஐபிஎல் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…

12 hours ago

PBKS vs RR : பஞ்சாப் பந்துவீச்சை சிதறடித்த ராஜஸ்தான்! வெற்றிக்கு 206 ரன்கள் டார்கெட்!

சண்டிகர் : இன்றைய ஐபிஎல் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…

14 hours ago

“சினிமாவில் அவர் CM ஆகலாம்., ஆனால் நிஜத்தில்.?” மீண்டும் விஜயை சீண்டிய பவர்ஸ்டார்!

சென்னை  : தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருக்கும் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் அவ்வப்போது சில அரசியல் கருத்துக்களை பேசியும்…

14 hours ago

CSK vs DC : மீண்டும் சொதப்பல்.. மீண்டும் தோல்வி! டெல்லியிடம் வீழ்ந்த சென்னை!

சென்னை : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ்…

16 hours ago