vijayakanth [file image]
Vijayakanth : கடும் நஷ்டத்தால் நொந்துபோன நடிகர் ஒருவருக்கு விஜயகாந்த் பெரிய உதவியை செய்துள்ளார்.
கேப்டன் விஜயகாந்த் உயிரோடு இருந்த சமயத்தில் பல புது தயாரிப்பாளர்களுக்கு தன்னுடைய படத்தை தயாரிக்கும் வாய்ப்பை கொடுத்து இருக்கிறார். அப்படி பல தயாரிப்பாளர்களும் இப்போது முன்னணி தயாரிப்பாளர்களாகவும் இருக்கிறார்கள். அந்த வகையில், பிரபல நடிகர் ஒருவர் நடிப்பதை விட்டுவிட்டு படங்களை தயாரிக்க முடிவு செய்து தயாரித்தபோது அவர் தயாரித்த படம் சரியான வெற்றியை பெறவில்லை என்பதால் நஷ்டத்தால் நொந்துபோனார்.
அந்த நடிகர் வேறு யாரும் இல்லை பல படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமான ஜெயபிரகாஷ் தான். இவர் ஆரம்ப காலத்தில் படங்களில் நடித்து கொண்டு இருந்த சமயத்தில் தனது சொந்த செலவில் படங்களை தயாரித்தும் இருந்தார். அப்படி ஒரு சமயம் இவர் தயாரித்த படங்கள் தோல்வியை தழுவிய நிலையில் பணம் ரீதியாக ஜெயபிரகாஷ்க்கு சரியான நஷ்டம் ஏற்பட்டதாம்.
இந்த நஷ்டத்தில் இருந்து எப்படி மீள்வது என தெரியாமல் யோசித்துக்கொண்டு இருந்தாராம். அந்த சமயம் விஜயகாந்த் ஜெயப்ரகாஷை சந்தித்து ஏதவாது கதை வைத்து இருக்கிறீர்களா? சேர்ந்து படம் பண்ணுவோமா என்று கேட்டாராம். உடனே சமுத்திரகனி ஒரு கதை வைத்து இருக்கிறார் அந்த கதையை கேளுங்கள் என்று ஜெயபிரகாஷ் கூறினாராம். சமுத்திரக்கனி அந்த சமயம் தான் நெறஞ்ச மனசு படத்தின் கதையை கூறினாராம்.
பிறகு கதை கேட்டுவிட்டு கதை நன்றாக இருக்கிறது நாம் இணைந்து படம் செய்யலாம் இந்த படத்தை நீங்களே தயாரிங்கள் என்று ஜெயபிரகாஷிடம் விஜயகாந்த் கூறினாராம். படத்தின் அட்வான்ஸ் தொகை எல்லாம் இப்போது வேண்டாம் சம்பளமும் வேண்டாம் நான் கேட்கும்போது கொடுங்கள் யாருடமும் கடன் வாங்காதீர்கள் என்றும் கூறினாராம். பிறகு நெறஞ்ச மனசு படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று மிகப்பெரிய ஹிட் ஆன நிலையில் ஜெயபிரகாஷ் மகிழ்ச்சி ஆனாராம். கேப்டன் கொடுத்த அந்த வாய்ப்பு தான் நஷ்டத்தில் இருந்து தன்னை மீட்டது எனவும் ஜெயபிரகாஷ் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி நேற்று (மார்ச் 30) நாக்பூர் பயணம் மேற்கொண்டது, இந்த பயணத்தில் ஆர்எஸ்எஸ் தலைமையகத்திற்கு…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (PTI) கட்சியின் நிறுவனரும், 2018 முதல் 2022 வரை பாகிஸ்தானின் பிரதமராக பதவி வகித்தவருமான…
மும்பை : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் , கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதி…
மும்பை : ஐபிஎல் 2025-ல் இன்று (மார்ச் 31) மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மும்பையின்…
மகாராஷ்டிரா : மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா (எம்என்எஸ்) தலைவர் ராஜ் தாக்கரே, 'மராத்தி பேச மறுத்தால் கன்னத்தில் அறைவோம்' என்று…
தூத்துக்குடி : திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி எம்.பி தனது தூத்துக்குடி மக்களவை தொகுதி சார்ந்து முக்கிய அறிவிப்பு…