காலமெல்லாம் காதல் வாழ்க என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை கௌசல்யா. இவர் இந்த திரைப்படத்தை தொடர்ந்து விஜயகாந்த், விஜய், சூர்யா உள்ளிட்ட நடிகர்களுடன் ஜோடியாக சில படங்களில் நடித்தார். முன்னணி நடிகையாக வளம் வர வேண்டிய இவர் ஆரம்ப காலகட்டத்தில் மிகவும் அமைதியாக கவர்ச்சியாக நடிக்கவே மறுப்பாராம்.
அது மட்டுமின்றி, படப்பிடிப்பு தளங்களில் அதிகமாக யார் கூடவும் பேசாமல் மிகவும் அமைதியாக இருப்பாராம். இதன் காரணமாக ஆரம்ப காலத்தில் பல படங்களில் தொடர்ச்சியா படங்களில் நடித்துக்கொண்டிருந்த இவர் பட வாய்ப்புகளே இல்லாமல் சினிமாவை விட்டு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விலகினார் என்றே கூறலாம்.
இந்த நிலையில், இவர் வளர்ந்து வந்துகொண்டிருந்த காலத்தில் விஜயகாந்த் இவருக்கு அட்வைடஸ் ஒன்றையும் கொடுத்துள்ளாராம். கௌசல்யா விஜயகாந்திற்கு ஜோடியாக தேவன் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது நடிகர் விஜயகாந்த் கௌசல்யாவிடம் பேசிகொண்டு இருந்தாராம்.
அப்போது நீ ஒரு நடிகையாக வளர வேண்டும் என்று ஆசைபடுகிறாய் எனவே படக்குழு எப்படியெல்லாம் நடிக்க சொல்கிறாரோ அதே போல நடி சில விஷயங்கள் நடக்கும்போது உன்னுடைய குரல் வெளியே கேட்கவேண்டும் அப்போது தான் ஒரு முன்னணி நடிகையாக நீ வளர முடியும். நீ இப்படியே பேசாமல் இருந்தால் அது நன்றாக இருக்காது நடிகை என்றால் வேறு மாதிரி இருக்கவேண்டும்.
படப்பிடிப்பு தளத்தில் ஏன் இப்படி அமைதியாக இருக்கிறாய் நன்றாக பேசி கொண்டு ஜாலியாக இரு என அட்வைஸ் செய்தாராம். ஆனால், கௌசல்யா இதெயெல்லாம் காது கொடுத்துக்கூட கேட்கவே இல்லயாம். ஏனென்றால், அவருடைய இயல்பே யாரிடமும் பேசாமல் அமைதியாக இருப்பது தானாம். அந்த சமயம் விஜயகாந்த் சொன்ன கருத்தை கேட்டு இப்போது கௌசல்யா வருத்தமாக இருக்கிறாராம்.
இது குறித்து பேசிய கௌசல்யா ” விஜயகாந்த் அட்வைஸ் செய்வது மிகவும் நன்றாக இருக்கும் மற்றவர்களை போல இல்லாமல் மனதில் பட்டத்தை வெளிப்படையாகவே பேசுவார். அவருடைய அட்வைஸ் நம்மலுடன் நெருக்கமாக இருப்பவர்கள் கூறுவது போல இருக்கும். ஆனால், அவர் எனக்கு கொடுத்த அட்வைஸை கேட்காமல் போய்விட்டேன்” என் கௌசல்யா தெரிவித்துள்ளார்.
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…