Vijayakanth : நடிகையின் கார் நடு ரோட்டில் நின்றபோது விஜயகாந்த் பெரிய விஷயம் ஒன்றை செய்துள்ளார்.
கேப்டன் விஜயகாந்த் பிரபலங்களுக்கு செய்த உதவிகளை பற்றிய தகவல் தினம் தினம் வெளிவந்து அவரை பாராட்ட வைத்து வருகிறது என்றே கூறலாம். அந்த அளவிற்க்கு விஜயகாந்த் உயிரோடு இருந்த சமயத்தில் பல உதவிகளை செய்து இருக்கிறார். அப்படி தான் ஒரு முறை வானத்தை போல படத்தின் படப்பிடிப்பின் போது நடிகை கௌசல்யா கார் நின்ற போது விஜயகாந்த் பெரிய விஷயம் ஒன்றை செய்துள்ளார்.
வானத்தை போல படத்தில் விஜயகாந்துடன் நடிகை கௌசல்யா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தின் போது விஜயகாந்திற்கு நடிகை கௌசல்யாவுக்கு அந்த அளவிற்கு பழக்கம் கூட இல்லயாம். ஒரு முறை படத்தின் படப்பிடிப்பு மழையில் நடந்து கொண்டு இருந்ததாம். படப்பிடிப்பு எல்லாம் முடிந்து கௌசல்யா சீக்கிரமாகவே காரில் சென்றுவிட்டாராம்.
அந்த சமயம் பார்த்து கௌசல்யா சென்ற அந்த கார் பஞ்சர் ஆகிவிட்டதாம். மழையும் மிகவும் வேகமாக பெய்துகொண்டு இருந்ததாம். அப்போது படப்பிடிப்பு முடிந்து விஜயகாந்த் கொஞ்சம் லேட்டாக தான் பின்னாடி காரில் வந்தாராம். முன்னாடி கௌசல்யா நின்ற காரை பார்த்துவிட்டு என்னாச்சு என்ற விவரத்தை கேட்டு தெரிந்தாராம்.
அதன்பிறகு ட்ரைவர் பஞ்சர் ஆன விஷயத்தை அவரிடம் கூறினாராம். பின் தான் வந்த காரை ஓரமா நிறுத்திவைத்துவிட்டு அவருடைய கார் ரெடி ஆகி முடிக்கட்டும் அதன் பிறகு நாம் செல்லலாம் என்று தான் வந்த காரின் டிரைவரிடம் கூறிவிட்டாராம். கிட்டத்தட்ட பல மணி நேரங்கள் அந்த காரை சரி செய்ய நேரம் ஆனதாம். கௌசல்யா கார் ரெடியானது வரை அங்கே விஜயகாந்த் நின்றாராம். ஆனால், அந்த சமயம் எல்லாம் அவ்வளவு பழக்கமே இல்லாமல் அவர் நின்றது மிகப்பெரிய விஷயம் என இந்த தகவலை கௌசல்யா தெரிவித்துள்ளார்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…