நடிகர் போண்டா மணி மறைவுக்கு விஜயகாந்த் இரங்கல்!
பிரபல நகைச்சுவை தமிழ் நடிகர் போண்டா மணி, உடல்நலக்குறைவால் காலமானார். தொடர்ந்து இரண்டு சிறுநீரகங்களும் அவருக்கு செயலிழந்தால், மாதத்திற்கு ஒருமுறை மருத்துவமனை சென்று டயாலிசிஸ் செய்து வந்துள்ளார்.
இதனையடுத்து நேற்று பல்லாவரம் அருகே உள்ள பொழிச்சலூரில் உள்ள தனது வீட்டில் போண்டமானி மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக உறவினர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
போண்டாமணியின் மறைவுக்கு ரசிகர்கள் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது இரங்கல் செய்தி குறிப்பில், “என் மீது மிகுந்த அன்பும், நட்பும், மரியாதையும் கொண்ட நல்ல மனிதர்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும், மற்றும் நண்பர்களுக்கும், திரையுலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்” என உருக்கமாக X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
நண்பர் களுக்கும், திரையுலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். #போன்டாமணி (2-2) pic.twitter.com/e5MyJRp48X— Vijayakant (@iVijayakant) December 24, 2023
அது மட்டும் இல்லாமல், தேமுதிக தலைவர் விஜயகாந்த் சார்பில், மறைந்த நடிகர் போண்டா மணியின் மனைவியிடம் நடிகர் மீசை ராஜேந்திரன், சாரப்பாம்பு சுப்புராஜ், தேமுதிக அனகை முருகேசன் ஆகியோர் உதவித்தொகை ரூபாய் 1 லட்சம் கொடுத்து, ஆறுதல் கூறி, இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.