மனைவியை காபி கொண்டு வர சொன்ன விஜயகாந்த் ..! ஆச்சரியமடைந்த இயக்குனர் அமீர் .!
Vijayakanth : கேப்டன் விஜயகாந்த்தின் நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்றை குறித்து இயக்குனர் அமீர் தற்போது ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.
கேப்டன் விஜயகாந்த் அவர்கள் நம் எல்லோருக்கும் ஒரு ஆச்சரியம் என்று கூறலாம் தற்போது அவர் நம்முடன் இல்லை என்றாலும் அவர் செய்த உதவிகள் மூலமாகவும் அவர்களின் படத்தின் வாயிலாகவும் நம்முடன் அவர் எப்போது இருந்து கொண்டிருக்கிறார். தற்போது அவரைப் அவரைப் பற்றி சுவாரசியமான விஷயங்களும் அவர் செய்த பல கண்ணுக்குத் தெரியாத உதவிகளும் அவர் நம்முடன் இல்லாத போது தான் தெரிகிறது.
அதே போல் அவர் மற்ற சினிமா பிரபலங்களிடம் நடந்து கொண்ட முறையையும் தற்போது சில பேட்டிகளில் அந்த பிரபலங்கள் கூறுவதை நம்மால் காண முடிகிறது. அதே போல ஒரு நேர்காணலில் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் குறித்து இயக்குனர் அமீர் தற்போது ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அது என்னவென்றால் அமீர் முதல் முறை விஜயகாந்த் அவர்களை வீட்டில் சந்தித்த போது அவரை வரவேற்று விதம் குறித்து அவர் கூறி இருந்தார்.
அந்த பேட்டியில் அவர் கூறுகையில்,”நான் முதல் முறைஅவரை சந்திக்க அவரது வீட்டிற்கு சென்றேன் அப்போது அவர் வீட்டின் வாசலுக்கு சென்ற போதே அவர் என்னை வரவேற்றார், அந்த வரவேற்ற சம்பவம் என்னை நெகிழ வைத்தது. மேலும், உள்ள சென்றவுடன் அமர சொல்லி பேசி கொண்டிருந்தோம். அப்போது, அவரது வீட்டில் வேலை செய்பவர் எனக்கு காப்பி கொண்டு வந்து கொடுத்தார், பேசி கொண்டிருந்த விஜயகாந்த் அவர் கொண்டு வந்த காப்பியை திரும்ப கொண்டு போக சொன்னார்.
மேலும், அந்த காப்பியை அவரது மனைவியான பிரேமாவிடம் கொடுத்து அனுப்ப சொன்னார். எனக்கு அது மிகவும் ஆச்சர்யமாக இருந்தது, மேலும் நான் ஒரு சாதாரணமான இயக்குனர் அவரது மனைவிக்கு நான் யார் என்று கூட தெரிந்திருக்காது. நான் அவரிடம் வேண்டாம் என்று சொன்னேன், அப்போது அவர் இல்லை தம்பி வீட்டுக்காரங்க தான் கொடுக்கணும் என்று கூறினார்.
அவர் சொன்னபடியே அவரது மனைவியும் வந்து காபி கொடுத்தாங்க, அவர்களிடம் இது தான் நம் தம்பி அமீர் இவரையும் நம் மகன் போல பார்த்து கொள்ள வேண்டும் என்று அவரது என்னை பற்றி கூறி அறிமுகம் செய்து வைத்தார். அது போன்ற அவரிடம் நான் அப்போது அல்ல அதை கடைசி வரை என்னால் பார்க்க முடிந்தது”, என்று அந்த பேட்டியில் இயக்குனர் அமீர் கேப்டன் விஜயகாந்த் குறித்த நெகிழ்ச்சி அடையும் சம்பவத்தை பற்றி பேசி இருந்தார்.