கடந்த 17,18 ஆகிய தேதிகளில் தென் மாவட்டங்களில் பெய்த கனமழையால், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. வரலாறு காணாத கனமழையால், தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், வெள்ளத்தால் ஒட்டுமொத்த வாழ்வாதாரத்தையும் இழந்து தவிப்புக்கு ஆளாகியுள்ள மக்களுக்கு விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில், நடிகர் விஜய் நலத்திட்ட உதவிகளை நேரடியாக வழங்க உள்ளார். நெல்லை கேடிசி நகரில் உள்ள மாதா மஹாலில் காலை 12 மணிக்கு நடைபெறும் இந்த விழாவில் பங்கேற்று சுமார் 1000 பேருக்கு, அரிசி, போர்வை உள்ளிட்ட பொருட்களை வழங்குகிறார்.
மேலும், இந்நிகழ்ச்சிக்கு தூத்துக்குடியில் இருந்து 400 மேற்பட்ட பாதிக்கப்பட்ட பொதுமக்கள் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். தற்போது, சென்னையில் இருந்து புறப்பட்டு தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வருகை தருகிறார்.
தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இலவச மருத்துவ முகாம்!
இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அனைத்தையும் தயார் நிலையில் வைத்திருக்கிறார். பொது மக்கள், ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என்றும், டோக்கன் வைத்திருக்கும் நபர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…