“மங்காத்தா” படத்தில் நடிக்கவிருந்த விஜய்! கடைசி நேரத்தில் மிஸ்ஸான காரணம்!

சென்னை : மங்காத்தா படத்தில் விஜய் நடிக்கமுடியாமல் போன காரணம் பற்றிய தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.

mankatha vijay

அஜித் குமார் என்ற பெயர் எடுத்தாலே நம்மில் பலருடைய நினைவுக்கு வரும் திரைப்படங்களில் ஒன்று மங்காத்தா படம் என்றே சொல்லலாம். இந்த படத்தில் அந்த அளவுக்கு வில்லத்தனமான ஒரு கதாபாத்திரத்தில் அஜித் நடித்திருப்பார். அதைப்போல, படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகர் அர்ஜுனும் நடித்திருந்தார். படத்தில் அஜித் கதாபாத்திரம் எந்த அளவுக்கு பேசப்பட்டதோ அதே அளவுக்கு அர்ஜுன் நடித்த கதாபாத்திரமும் பேசப்பட்டது.

இந்நிலையில், இந்த படத்தில் முதலில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் நடிக்க இருந்ததே நடிகர் விஜய் தான். படத்தின் கதையை எழுதும்போதே இயக்குனர் வெங்கட் பிரபு அஜித் -விஜய் இருவரும் தான் மங்காத்தா படத்தில் நடிக்கவேண்டும். இதில் விநாயக் கதாபாத்திரத்தில் அஜித்தும், பிரித்திவ் கதாபாத்திரத்தில் விஜய் நடிக்க வைக்க முடிவு செய்தாராம். ஆனால், அந்த சமயம் விஜய் மிகவும் பிஸியாக இருந்தாராம்.

இந்த நேரத்தில் இந்த கதையை விஜயிடம் சொன்னால் சரியாக இருக்காது. அதைப்போல, படத்தில் அஜித்திற்குத் தான் மாஸ் காட்சிகள் இருக்கிறது. எனவே, இந்த கதையை விஜயிடம் சொன்னால் அவர் நடிக்கமாட்டார் என வெங்கட் பிரபு யோசித்து விஜயிடம் படத்தின் கதையைக் கூடச் சொல்லவே இல்லையாம். பிறகு தான் அர்ஜுனிடம் கதையைக் கூறி அவரை படத்தில் நடிக்க வைத்தார்களாம்.

அதன்பின், மங்காத்தா படம் வெளியான பிறகு படத்தினை பார்த்துவிட்டு இயக்குனர் வெங்கட் பிரபுவை தன்னுடைய வீட்டிற்கு அழைத்து விருந்து வைத்துப் படத்தைப் பாராட்டி விஜய் பேசினாராம். அப்போது வெங்கட் பிரபு அர்ஜுன் கதாபாத்திரத்தில் உங்களை வைத்து எடுக்கலாம் என்று இருந்தேன் என கூற, அதற்கு விஜய் ‘முதலில் என்னிடம் சொல்லி இருந்தால் நானே இந்த படத்தில் நடித்திருப்பேன் ‘ எனக் கூறினாராம். ஒரு வேலை அர்ஜுன் கதாபாத்திரத்தில் விஜய் நடித்திருந்தால் படம் இன்னும் வேற லெவலுக்கு இருந்திருக்கும் என விஜய் ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்