நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள டார்க் காமெடி கலந்த ஆக்சன் படம் “பீஸ்ட்”. சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்த திரைப்படத்தில் பூஜாஹெக்டே விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார்.
இயக்குனர் செல்வராகவன், யோகி பாபு, விடிவி கணேஷ், சாம்டைம் சாக்கோ போன்ற பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இந்த படத்தை பார்க்க ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்து காத்துள்ளனர்.
இந்த படம் வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. அடுத்த வாரம் புதன் கிழமை படம் வெளியாகவுள்ள நிலையில், படத்திற்கான ப்ரோமோஷன் செய்யும் பணியில் படக்குழு தீவிரமாக இறங்கியுள்ளது.
அந்த வகையில், ஹைதராபாத்தில் நடைபெற்ற பீஸ்ட் தெலுங்கு ப்ரோமோஷன் விழாவில், இயக்குனர் நெல்சன், இசையமைப்பாளர் அனிருத், நடிகை பூஜாஹெக்டே உள்ளிட்டோர் கலந்துகொண்டார்கள். அனிருத் மற்றும் பூஜா அரபிகுத்து பாடலுக்கு நடனமாடினார்கள்.
நிகழ்ச்சியில் பேசிய பூஜா ஹெக்டே ” பீஸ்ட் படத்தில் நடித்திருப்பது மிகவும் மகிழ்ச்சி..என்னுடைய ஹீரோ விஜய் சார் விழாவிற்கு வரவில்லை நான் உங்களை மிஸ் பண்றேன் சார்..நான் மட்டுமில்லை இங்கே இருக்கும் அனைவரும் மிஸ் பண்றோம் சார்” என எமோஷனலாக பேசியுள்ளார். அதற்கான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
இலங்கை : பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு சென்று இருக்கும் நிலையில், இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக முன்னிலையில்…
லக்னோ : ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்காக விளையாடி வரும் திக்வேஷ் ரதி தான் வாங்கும் சம்பளத்தை விட அதிகமாக…
டெல்லி : கடந்த 2019-ஆம் ஆண்டு இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஹிருத்திக் ரோஷன் மற்றும் டைகர் ஷ்ராஃப் நடிப்பில் வெளியாகி…
சென்னை : தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 2024-25 நிதியாண்டில் 9.69% என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது, இது மாநிலத்தின் வரலாற்றில்…
லக்னோ : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை…
வாஷிங்டன் : ஏப்ரல் 4, 2025 அன்று, சீனா அமெரிக்க பொருட்களுக்கு 34% கூடுதல் சுங்கவரியை அறிவித்து, ட்ரம்பின் சுங்கவரி…