தமிழ் சினிமாவில் இயக்குனராக களமிறங்கி தற்போது நடிகராக கலக்கி வருபவர் செல்வராகவன். தற்போது தனுஷை வைத்து நானே வருவேன் படத்தை இயக்கி வருகிறார். இதற்கிடையில், சாணி காயிதம், பீஸ்ட், நானே வருவேன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
இதில் விஜய் நடித்த பீஸ்ட் படத்தில் செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் இயக்குனர் செல்வராகவன் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாகியுள்ளார். இன்று உலகம் முழுவதும் பீஸ்ட் திரைப்படம் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. படத்தை பார்த்த அனைவரும் விஜய், செல்வராகவன் கதாபாத்திரத்தையும் பாராட்டி வருகிறார்கள்.
இந்த நிலையில், இயக்குனர் செல்வராகவனிடம் சமீபத்தில் ஒரு பேட்டியில் விஜய் படம் இயக்கும் வாய்ப்பு கிடைத்ததாக என்று கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த செல்வராகவன் ” முன்னாடி நடந்திருக்கு.. விஜய் சாரை வைத்து வாய்ப்பு வந்திருக்கு ஆனால் கால்ஷீட் காரணமாக நடக்க வில்லை” என்று கூறியுள்ளார்.
அடுத்தாக நீங்கள் விரைவில் விஜய்யை வைத்து படம் இயக்க வாய்ப்புள்ளதா.? என்ற கேள்வியும் கேட்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலளித்த செல்வராகவன் ” கண்ணாடிப்பாக நடக்கலாம் அதற்கான சரியான கதை மற்றும் கால்ஷீட் அமைந்துவிட்டால் கண்டிப்பாக பண்ணலாம்” என தெரிவித்துள்ளார்.
குஜராத்: இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி, 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட…
ராமேஸ்வரம்: தமிழக மீனவர்களுக்கு எதிரான இலங்கையின் தொடர் கைது நடவடிக்கை, மீனவ குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மீண்டும், எல்லை தாண்டி…
சென்னை: தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு தண்டையார்பேட்டை மெட்ரோ ரயில் சுரங்க…
தெலங்காணா: கடந்த டிசம்பர் 4-ம் தேதி 'புஷ்பா 2' சிறப்பு காட்சியின் திரையிடலின் போது, சந்தியா திரையரங்கில் ஏற்பட்ட கூட்ட…
டெல்லி : இந்திய அணியின் இளம் கிரிக்கெட் வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் போன்ற வீரர்களுக்கு…
கோவை : ஆரோக்கியசாமி சாலை, ராமச்சந்திரா சாலை, டி.பி.ரோடு, லாலி சாலை, தடாகம் சாலை, கவுலிபிரவுன் சாலை, டி.வி.சாமி சாலை,…