கோட் படத்தை பார்த்து பயந்த விஜய்! என்ன சொல்லிருக்காரு தெரியுமா?
கோட் : வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் கோட் படம் வரும் செப்டம்பர் மாதம் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டும் இருக்கும் நிலையில், படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. படத்திற்கான எடிட்டிங் வேலைகள் ஒரு பக்கம் மும்மரமாக நடைபெற்று வருகிறது.
மற்றோரு பக்கம் படத்தின் பின்னணி இசைக்கான வேலையை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தொடங்கியுள்ளார். இதற்கிடையில், படத்தின் முதல் பாதியை பார்த்துவிட்டு விஜய் தெறிக்கிது என்பது போல கூறியதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. அதனை தொடர்ந்து அடுத்ததாக மற்றோரு தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
அது என்னவென்றால், விஜய் கோட் படத்தின் முதல் பாதியை பார்த்தது உண்மை தானாம். படத்தினை பார்த்து முடித்தவுடன் மிகவும் மகிழ்ச்சியாகிவிட்டாராம். மகிழ்ச்சியாகி முதல் பாதி மிகவும் அருமையாக இருக்கிறது. படத்தினை ரொம்பவே மக்கள் எதிர்பார்கிறார்கள் பார்த்து சரியாக நன்றாக செய்யுங்கள் என்பது போல முதல் பாதி அளவிற்கு இரண்டாவது பாதி வரவேண்டும் என்று சூசகமாக கூறினாராம்.
இருப்பினும் முதல் பாதி ரொம்பவே விஜய் பிடித்த காரணத்தால் படக்குழுவையும் பாராட்டியுள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், கோட் படத்தில் இருந்து ஏற்கனவே 2 பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்ததாக மூன்றாவது பாடல் விரைவில் வெளியாகவுள்ளது. இதனை ஏற்கனவே தயாரிப்பாளர் மற்றும் வெங்கட் பிரபு அறிவித்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.