kamal haasan [File Image]
கடந்த சில மாதங்களுக்கு முன்பு துபாயில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட விஜய் தொலைக்காட்சி பிரபலங்கள் புகழ் மற்றும் குரேஷி இருவரும் கமல்ஹாசன் குறித்து பேசிய விஷயம் இப்போது ட்ரெண்ட் ஆகி கமல் ரசிகர்களை கோபத்தில் ஆழ்த்தியது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள மாயாவையும், கமலையும் வைத்து குரேஷி பேசி இருந்தார்.
இந்த வீடியோ இன்று வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிய நிலையில், கமல் ரசிகர்கள் பலரும் ஒரு பொதுமேடையில் இப்படியா பேசுவது என கேள்விகளை எழுப்பி வந்தனர். இது ஒரு பக்கம் பேசும்பொருளாகியுள்ள நிலையில், தற்போது மன்னிப்பு கேட்டு புகழ் மற்றும் குரேஷி இருவருமே வீடியோ வெளியிட்டுள்ளனர்.
வீடியோவில் புகழ் பேசியதாவது ” நான் அப்படி நடந்துகொண்ட காரணத்துக்காக கமல் சார் ரசிகர்களிடம் இப்போது மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அது ஒரு 2 மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற நிகழ்ச்சி நான் அப்படி செய்தது ரசிகர்களின் மனதை வருத்தமடைய செய்திருந்தது என்றால் நான் இப்போது மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இனிமேல் நான் வரும் காலங்களில் இதுபோன்று செய்யவேமாட்டேன்.
கேப்டன் மில்லருக்கு பாராட்டு! அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த நடிகர் தனுஷ்!
கமல் சாரை எனக்கு மிகவும் பிடிக்கும் அவருடன் இருந்தவாறு இல்லை நான் அவருக்கு பின்னால் இருந்தபடி ஒரு புகைப்படம் வெளியீட்டு எனக்கு முன்னாடி தமிழ் சினிமா என்று கூறியிருந்தேன். அந்த அளவிற்கு எனக்கு கமல்ஹாசன் சாறை மிகவும் பிடிக்கும்” எனவும் புகழ் கூறியுள்ளார்.
அவரை தொடர்ந்து வீடியோவில் பேசியுள்ள குரேஷி ” முதலில் நான் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். நான் அப்படி செய்யும் போது அது இந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எனக்கு சத்தியமாக தெரியவில்லை. அந்த நிகழ்ச்சியில் நாங்கள் நிறையவே செய்து இருந்தோம் ஆனால், கமல்ஹாசன் சாரை பற்றி பேசியதை மட்டும் தனியாக எடுத்து போட்டுகொண்டு இருக்கிறார்கள். இருந்தாலும் நாங்கள் அப்படி செய்தது மிகவும் தவறு. அதற்காக நான் இப்போது மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” எனவும் குரேஷி தெரிவித்துள்ளார்.
பெங்களூரு : இன்று (ஏப்ரல் 9) நடைபெறும் ஐபிஎல் 2025-ன் 24-வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB)…
சென்னை : தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக சட்டப்பேரவையில் ஆளும் தமிழக அரசால் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கால…
டொமினிகன் : இசை நிகழ்ச்சிக்காக ஒன்றுகூடி ஜாலியாக, வைப் செய்து கொண்டிருந்தவர்களின் ஆனந்தக்குரல், ஒரே நொடியில் அழுகுரலாக மாறிவிட்டது. ஆம்,…
சென்னை : இன்று (ஏப்ரல் 10) அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள 'குட் பேட் அக்லி' திரைப்படம் உலகம் முழுக்க ரசிகர்கள்…
விழுப்புரம் : இன்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். தற்போது வரை பாமக நிறுவனராக…
சென்னை : அஜித்குமார் நடிப்பில் இன்று குட் பேட் அக்லி திரைப்படம் ரிலீஸ் ஆகியுள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இந்த…