கமல் சார் ரசிகர்கள் மன்னிச்சிடுங்க! வீடியோ வெளியிட்ட புகழ்- குரேஷி!

kamal haasan

கடந்த சில மாதங்களுக்கு முன்பு துபாயில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட விஜய் தொலைக்காட்சி பிரபலங்கள் புகழ் மற்றும் குரேஷி இருவரும் கமல்ஹாசன் குறித்து பேசிய விஷயம் இப்போது ட்ரெண்ட் ஆகி கமல் ரசிகர்களை கோபத்தில் ஆழ்த்தியது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள மாயாவையும், கமலையும் வைத்து குரேஷி பேசி இருந்தார்.

இந்த வீடியோ இன்று வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிய நிலையில், கமல் ரசிகர்கள் பலரும் ஒரு பொதுமேடையில் இப்படியா பேசுவது என கேள்விகளை எழுப்பி வந்தனர். இது ஒரு பக்கம் பேசும்பொருளாகியுள்ள நிலையில், தற்போது மன்னிப்பு கேட்டு புகழ் மற்றும் குரேஷி இருவருமே வீடியோ வெளியிட்டுள்ளனர்.

வீடியோவில் புகழ் பேசியதாவது ” நான் அப்படி நடந்துகொண்ட காரணத்துக்காக கமல் சார் ரசிகர்களிடம் இப்போது மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அது ஒரு 2 மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற நிகழ்ச்சி நான் அப்படி செய்தது ரசிகர்களின் மனதை வருத்தமடைய செய்திருந்தது என்றால் நான் இப்போது மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இனிமேல் நான் வரும் காலங்களில் இதுபோன்று செய்யவேமாட்டேன்.

கேப்டன் மில்லருக்கு பாராட்டு! அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த நடிகர் தனுஷ்!

கமல் சாரை எனக்கு மிகவும் பிடிக்கும் அவருடன் இருந்தவாறு இல்லை நான் அவருக்கு பின்னால் இருந்தபடி ஒரு புகைப்படம் வெளியீட்டு எனக்கு முன்னாடி தமிழ் சினிமா என்று கூறியிருந்தேன். அந்த அளவிற்கு எனக்கு கமல்ஹாசன் சாறை மிகவும் பிடிக்கும்” எனவும் புகழ் கூறியுள்ளார்.

அவரை தொடர்ந்து வீடியோவில் பேசியுள்ள குரேஷி ”  முதலில் நான் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். நான் அப்படி செய்யும் போது அது இந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எனக்கு சத்தியமாக தெரியவில்லை. அந்த நிகழ்ச்சியில் நாங்கள் நிறையவே செய்து இருந்தோம் ஆனால், கமல்ஹாசன் சாரை பற்றி பேசியதை மட்டும் தனியாக எடுத்து போட்டுகொண்டு இருக்கிறார்கள். இருந்தாலும் நாங்கள் அப்படி செய்தது மிகவும் தவறு. அதற்காக நான் இப்போது மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” எனவும் குரேஷி தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live tamil news
aakash chopra abhishek sharma
elon musk donald trump
mk stalin assembly NEET
empuraan - gokulam
Anand - WaqfAmendmentBill
Darshan Attacks