முதன் முதலாக அஜித் பட இயக்குனருடன் இணையும் விஜய்..? “தளபதி 68” படத்தின் வெறித்தனமான அப்டேட்.!!

நடிகர் விஜய் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார் . இந்த திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது . இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் அடுத்ததாக யாருடைய இயக்கத்தில் தனது 68வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல் அடிக்கடி இணையத்தில் பரவி வருகிறது.

குறிப்பாக, கடந்த சில நாட்களாகவே நடிகர் விஜயின் 68-வது திரைப்படத்தை பிரபல இயக்குனர் அட்லீ இயக்குவது கிட்டத்தட்ட உறுதியாக விட்டது என்று சினிமா வட்டாரத்தில் தகவல்கள் பரவி வந்தது. அதனை தொடர்ந்து தற்போது மீண்டும் ஒரு புதிய தகவல் பரவி வருகிறது.

அது என்னவென்றால், அட்லி ஜவான் படத்தை தொடர்ந்து மீண்டும் பாலிவுட் படம் ஒன்றை இயக்கவுள்ளாராம். எனவே, விஜயன் 68-வது திரைப்படத்தை அட்லீ இயக்கவில்லையாம். அவருக்கு பதிலாக அஜித்தை வைத்து மங்காத்தா, சிம்புவை வைத்து மாநாடு போன்ற படங்களை இயக்கிய வெங்கட் பிரபு தான் விஜயின் 68 வது திரைப்படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளதாகவும் கூடுதலான தகவல்.
#Thalapathy68 Director Buzz ⭐:
• Atlee
• Venkat Prabhu
• Karthik Subbaraj
• Sudha KongaraWho would you prefer in this List..? pic.twitter.com/kKqbGXNLbk
— Laxmi Kanth (@iammoviebuff007) May 15, 2023
அதைப்போலவே, இதுவரை தளபதி 68 உடன் இணைக்கப்பட்ட இயக்குனர்களில் தெலுங்கு திரைப்பட இயக்குனர் கோபிசந்த் மலினேனி மற்றும் சமீபத்தில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் கார்த்திக் சுப்பராஜ் ஆகியோர் அடங்குவர். எனவே, அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தால் மட்டும் தான் யார் தளபதி 68 படத்தை இயக்குவார் என்பது தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
தமிழிசையின் இல்லத்திற்கு சென்று ஆறுதல் கூறிய அமித் ஷா.!
April 11, 2025