விஜய் கதவை சாத்திக்கிட்டு அழுதாரு…உண்மை சம்பவத்தை கூறிய பிரபல தயாரிப்பாளர்.!
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் தற்போது லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவர் இப்போது உச்சத்தில் இருக்கலாம், ஆனால் இவர் ஆரம்ப காலகட்டத்தில் எந்த அளவிற்கு கஷ்டங்களையும் அவமானங்களையும் தாண்டி தான் இவ்வளவு பெரிய இடத்திற்கு வந்துள்ளார். எனவே பல சினிமா பிரபலங்கள் விஜய் வளர்ச்சி குறித்து பெருமையாக பேசுவார்கள்.
அந்த வகையில், பிரபல தயாரிப்பாளரான பி.டி.செல்வகுமார் சமீபத்திய பேட்டி ஒன்றில் விஜய் பற்றி பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” ஆரம்ப காலகட்டத்தில் விஜய் இவ்வளவு பெரிய நடிகராக வருவார் என யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஒருமுறை அவரது முகத்தை கேலி செய்து பெரிய பத்திரிக்கை ஒன்று எழுதியது.
அதனை பார்த்ததும் விஜய் மன வேதனை அடைந்து அவருடைய வீட்டில் உள்ள கதவை வேகமாக அடைத்து கொண்டு உள்ளே கதவை சாத்திக்கிட்டு அழுதாரு. பிறகு நாங்கள் தான் அவருக்கு ஆறுதல் கூறி உங்களை தவறாக எழுதிய பத்திரிகை நாளை உங்களை பற்றி வளர்ச்சியை எழுத வேண்டும்.
அந்த அளவிற்கு நீங்கள் வளரவேண்டும் சார் என்று கூறி , அவருக்கு ஆறுதல் கொடுத்தேன். இப்போது விஜய் சார் தமிழ் சினிமாவின் உச்சநட்சத்திரமாக மாறிவிட்டார். இது எல்லாம் அவருடைய கடின உழைப்புனால் மட்டுமே நடந்தது” என்று கூறியுள்ளார்.