கேப்டன் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் போது கண்ணீர் சிந்திய விஜய்!

தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் நேற்று காலை காலமானார். இவருடைய மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், மக்கள் அரசியல் பிரபலங்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். விஜயகாந்தின் உடல் இறுதி அஞ்சலிக்காக தேமுதிக அலுவலகத்தில் இருந்து இன்று காலை தீவுத்திடலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த நிலையில் விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்த நடிகர் விஜய் நேற்று வருகை தந்தார். அஞ்சலி செலுத்தும்போது விஜயகாந்தின் உடலை பார்க்க முடியாமல் கண்கலங்கி அழுதார். அஞ்சலி செலுத்துவிட்டு விஜயகாந்த் குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்ததோடு கடைசி 10 நொடிகள் விஜயகாந்தின் முகத்தையே பார்த்துக்கொண்டு கண்கலங்கினார்.
விஜயகாந்தை பொதுக்குழுவில் பார்க்கும் போது நம்பிக்கை குறைந்தது -ரஜினிகாந்த்..!
மேலும், இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் 1993 ஆம் ஆண்டு வெளியான படம் ‘செந்தூரபாண்டி’ படத்தில் விஜய் நல்ல நடிகராகி வளர வேண்டும் என்பதறகக அவருடைய வளர்ச்சிக்காக அப்படத்தில் விஜயகாந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து கொடுத்தார்.
தனது வெற்றிக்கு காரணமான இயக்குனர்களில் எஸ்.ஏ.சி.யும் ஒருவர் என்பதால், செந்தூரபாண்டி படத்திற்கு விஜயகாந்த் சம்பளம் வாங்காமல் நடித்தார். எனவே, தன்னுடைய சினிமா வாழ்வின் வளர்ச்சிக்கு உதவிய விஜயகாந்தின் மறைவுக்கு நன்றிக்கடன் செலுத்தும் விதமாக நேரில் வந்து கண்ணீர் விட்டு அஞ்சலி செலுத்தினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025