பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள பாலிவுட் திரைப்படமான மெரி கிறிஸ்துமஸ் படம் வெளியாகிறது என படக்குழு அறிவித்துள்ளது
பொங்கல் மற்றும் தீபாவளி பண்டிகை என்றாலே வருடம்தோறும் பல நல்ல படங்கள் வெளியாவது வழக்கமான ஒன்று. அந்த வகையில், தமிழில் இந்த ஆண்டு (2023) தீபாவளி பாண்டிகையை ஜப்பான், ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ்எல், ரெய்டு ஆகிய 3 திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகி மூன்றுமே நல்ல வரவேற்பை பெற்றது.
தீபாவளி பண்டிகையை தொடர்ந்து அடுத்ததாக அடுத்த ஆண்டு (2024) பொங்கல் பண்டிகை வரவிருக்கிறது. பொங்கலை முன்னிட்டு சில தமிழ் திரைப்படங்கள் வெளியாகவிருக்கும் நிலையில், அந்த லிஸ்டில் புதியதாக ஒரு திரைப்படம் இணைந்துள்ளது. அது வேற யாரும் இல்லை. தமிழ் சினிமா முதல் பாலிவுட் சினிமா வரை வில்லனாக ஒரு கலக்கு கலக்கி வரும் நம்ம விஜய் சேதுபதி திரைப்படம் தான்.
இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப் இணைந்து நடிக்கும் திரைப்படம் மெரி கிறிஸ்துமஸ். தற்போது இந்தப் படத்தின் இறுதிக் கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இபடம் குறித்த புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது, இந்த திரைப்படம் வரும் ஜனவரி மாதம் 12ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. ஏற்கெனவே பொங்கல் பண்டிகையை பல படங்கள் குறி வைத்தது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, படம் பெயர் மெரி கிறிஸ்துமஸ் என்று வைக்கப்பட்டுள்ளது கடந்த ஆண்டே கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதர்வா நடிக்கும் பிரமாண்ட புது படம்! இயக்குனர் யார் தெரியுமா?
பின்னர் சில காரணங்களால், இந்தாண்டு டிசம்பர் 15ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அதுவும், சரியில்லை என்று, டிசம்பர் 8ஆம் தேதி வெளியாகும் என கடந்த மாதம் படக்குழு அறிவித்தன. இப்படி அப்போது இப்பொது என ரிலீஸ் தேதியை மாற்றி கொண்டிருக்கும் படக்குழு தற்போது மீண்டும் மாற்றியுள்ளது.
அதன்படி, பொங்கல் பண்டிகை முன்னிட்டு 12ம் தேதி வெளியாகும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே சியான் விக்ரமின் தங்கலான், நடிகர் சிவகார்த்திகேயன் அயலான், நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் லால்சலாம் திரைப்படம் மற்றும் இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் 3 பாகங்களாக வெளியாகி ஹிட் ஆன அரண்மனை படத்தின் 4ம் பாகமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை : இந்த ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வருகின்ற பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி அதற்கு அடுத்த மாதமான…
கொல்கத்தா : நாட்டில் மிகவும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்திய சம்பவங்களில் ஒன்று கடந்த ஆண்டு மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில் மருத்துவ…
சென்னை : பிக் பாஸ் சீசன் 8 தமிழ் ஆரம்பத்தில் எதிர்பார்புகளுடன் தொடங்கப்பட்டாலும் அதற்கு பிறகு சில நாட்கள் வரவேற்பு குறைந்தது…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுக்கள்…
காஞ்சிபுரம்: வருகின்ற ஜன.20ம்தேதி தவெக தலைவர் விஜய், பரந்தூரில் இருக்கும் மக்களை சந்திக்க காவல்துறை கட்டுப்பாடுகள் விதித்க்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல்…
சென்னை: தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,…