இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் விக்ரம். இந்த படத்தை பார்க்க ஒட்டு மொத்த சினிமா ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர். படத்தில் விஜய் சேதுபதி, பஹத் பாசில், நரேன், ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். படம் வரும் ஜூன் மாதம் 3-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில், ஹீரோ, வில்லன் என இரண்டு கதாபாத்திரங்களும் நடித்து கலக்கி வரும் விஜய் சேதுபதி இந்த விக்ரம் படத்திலும் வில்லன் கதாபாத்திரத்தில் தான் நடித்துள்ளார். இதனால் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பும் உள்ளது.
படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தது குறித்து பேசிய விஜய் சேதுபதி “மாஸ்டர் மற்றும் உபென்னா படத்தில் எனது கதாபாத்திரம் ஒரே மாதிரியாக இருந்திருக்காது. அதேபோல தான் விக்ரம் படத்திலும் என்னுடைய நடிப்பும் இருக்கும், ஒரு மனிதனின் மிகவும் மோசமான பக்கத்தை தெளிவாக காட்டியிருப்பேன்” என தெரிவித்துள்ளார்.
ஹைதராபாத் : கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியாகியிருந்த அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் மூலம் தான் இயக்குனராக சந்தீப் ரெட்டி வங்கா…
மும்பை : இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், கடந்த சனிக்கிழமை இந்த ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்…
மும்பை : இங்கிலாந்துக்கு எதிரான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் 4 வெற்றிகளுடன் இந்திய அணி தொடரை கைப்பற்றியது.…
சென்னை : சிம்புவின்48-வது திரைப்படத்தினை இயக்குநர் தேசிங் பெரியசாமி இயக்கவுள்ளதாகவும் அந்த படத்தினை கமல்ஹாசன் தன்னுடைய சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல்…
மும்பை : இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று,…