பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் விஜய் சேதுபதி! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
நடிகர் விஜய் சேதுபதி தமிழ் பிக் பாஸ் சீசன் 8-ஐ தொகுத்து வழங்குவார் என ப்ரோமோவுடன் விஜய் தொலைக்காட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சியின் 8-வது தமிழ் சீசன் எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், மற்றோரு பக்கம் நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்குவார் என்ற எதிர்பார்ப்பும் எழுந்தது. ஏனென்றால், இதுவரை 7 சீசன்களை தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் பிக் பாஸ் 8-ஐ தான் தொகுத்து வழங்கவில்லை தற்காலிகமாக விலகி கொள்வதாக அறிவித்திருந்தார்.
அந்த அறிவிப்பு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது என்று தான் சொல்லவேண்டும். ஏனென்றால், பிக் பாஸ் நிகழ்ச்சி விறு விறுப்பாக செல்வதற்கு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் பிரபலங்கள் ஒரு காரணம் என்றால் மற்றோரு காரணம் கமல்ஹாசன் தான். கமல்ஹாசன் நகைச்சுவையாக பகிர்ந்து கொள்ளும் விஷயங்கள் மற்றும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நேர்மையாகவும், விளையாடுபவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பார்.
எனவே, அவரைப்போல நன்றாக பேச தெரிந்த ஒருவரால் மட்டும் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்த முடியும். இந்த சூழலில் தான் விஜய் டிவி நிறுவனம் விஜய் சேதுபதியை வைத்து பிக் பாஸ் 8-வது சீசனை நடத்தவுள்ளது. ஏற்கனவே, விஜய் சேதுபதி தான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்ற தகவல் முன்னதாகவே லீக் ஆகிவிட்டது.
நிகழ்ச்சிக்கான ப்ரோமோ ஷூட்டிங் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாண்டிச்சேரி பகுதியில் நடைபெற்ற நிலையில், அதில் கலந்துகொண்டு நடத்த விஜய் சேதுபதியின் புகைப்படங்கள் வைரலானது.அதனைத்தொடர்ந்து தற்போது ப்ரோமோவை வெளியீட்டு விஜய் சேதுபதி தான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்பது அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, விஜய் சேதுபதி நம்ம ஊரு ஹீரோ, MasterChef India – தமிழ் சீசன் 1 ஆகிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். விஜய் சேதுபதியும் பொது மேடைகளில் தனக்கு தோன்றும் விஷயங்களை தெளிவான பார்வையில் பேசக்கூடியவர். எனவே, அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதால் இன்னுமே நிகழ்ச்சி மீது எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. விரைவில் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவுள்ள பிரபலங்கள் பற்றிய அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
சென்னையில் கால்பந்து போட்டி.., போக்குவரத்து மாற்றம்.! ரூட்டை பார்த்து தெரிஞ்சிக்கோங்க…
March 29, 2025
தனக்குத்தானே எக்ஸ் தளத்தை வியாபாரம் செய்த எலான் மஸ்க்.! வாங்குனது எவ்வளவு? விற்றது எவ்வளவு?
March 29, 2025