விஜய் சேதுபதி – சிவகார்த்திகேயன் திரைப்படங்கள் ஒரே நாளில் மோதல்
விஜய் சேதுபதி வைத்து பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி ஆகிய இரு படங்களை இயக்கியவர் இயக்குனர் அருண்குமார்.இந்த இரு படங்களில் “சேதுபதி” திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.
இப்படம் விஜய் சேதுபதிக்கு ஒரு திருப்பு முனையாகவும் அமைந்தது. அதன் பின் பல வெற்றி படங்களில் நடித்து உள்ளார்.இந்நிலையில் தற்போது விஜய் சேதுபதியின் 26-வது படத்தை இயக்குனர் அருண்குமார் இயக்குகிறார்.
அருண்குமார், விஜய் சேதுபதி கூட்டணியில் மூன்றாவது முறையாக இணைந்துள்ள இந்த படத்திற்கு “சிந்துபாத்” என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக அஞ்சலி நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து உள்ளார்.
இந்நிலையில் “சிந்துபாத்” திரைப்படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.இப்படம் வருகின்ற மே17-ம் தேதி வெளியாக உள்ளது. அதே நேரத்தில் சிவகார்த்திகேயன் நடித்த “MR.லோக்கல்” அன்று தான் படமும் வெளியாக உள்ளது.