Vijay Sethupathi [File Image]
Vijay Sethupathi : டிஎஸ்பி எனும் பிளாப் படத்தை கொடுத்த இயக்குனர் பொன் ராமுடன் விஜய் சேதுபதி மீண்டும் இணையவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் விஜய் சேதுபதி தற்போது தனது 50-வது திரைப்படமான மகாராஜா படத்தில் நடித்து வருகிறார். அதைப்போல மிஸ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் ட்ரெயின் படத்திலும் நடித்து வருகிறார். இந்த படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வருகிறது. இதற்கிடையில், அவர் பிளாப் கொடுத்த இயக்குனர் ஒருவருடன் இணைந்து மீண்டும் படம் செய்யப்போவதாக வெளியான தகவல் அவருடைய ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அந்த இயக்குனர் வேறு யாரும் இல்லை விஜய் சேதுபதியை வைத்து கடைசியாக டிஎஸ்பி படத்தை இயக்கிய இயக்குனர் பொன் ராம் தான். இந்த டிஎஸ்பி படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த 2022-ஆம் ஆண்டு வெளியானது. எதிர்பார்த்த அளவிற்கு படம் இல்லாத காரணத்தால் படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் தோல்வியை சந்தித்தது.
இந்த சூழலில் மீண்டும் இயக்குனர் பொன் ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளாராம். பொன்ராம் டிஎஸ்பி படத்திற்கு முன்னதாக ரஜினிமுருகன், வருத்த படாத வாலிபர் சங்கம் உள்ளிட்ட ஹிட் படங்களை இயக்கி இருந்தாலும் கூட அவர் கடைசியாக இயக்கிய டிஎஸ்பி படம் பெரிய அளவில் தோல்வியை சந்தித்தது.
எனவே, இதன் காரணமாக தான் விஜய் சேதுபதி மீண்டும் பொன்ராமுடன் இணையவுள்ளதாக வெளியாகி இருக்கும் தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். ஒரு சிலர் ஒரு தடவை பட்டது போதாதா ? என்று கலாய்த்து வந்தாலும் கூட ஒரு சிலர் கண்டிப்பாக மீண்டும் இவர்கள் இணைகிறார்கள் என்றால் கண்டிப்பாக ஜினிமுருகன், வருத்த படாத வாலிபர் சங்கம் போன்ற படங்கள் அளவிற்கு ஒரு ஹிட் படம் வரும் எனவும் கூறி வருகிறார்கள். இன்னும் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் தொடர்பாக கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று வீட்டுவசதித்துறை மானிய கோரிக்கைகள் நடைபெற்று…
சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவராக தற்போது அண்ணாமலை பொறுப்பில் இருக்கிறார். இவர் விரைவில் மாற்றம் செய்யப்படுகிறார் என்றும், விரைவில்…
உத்தரபிரதேசம் : நேற்று, நாடு முழுவதும் இந்து பண்டிகையான ராம நவமி கொண்டாடப்பட்டது. இந்த நிலையில், உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ்…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் தொடர்பாக கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று வீட்டுவசதித்துறை மானிய கோரிக்கைகள் நடைபெற்று…
மும்பை : கடந்த வாரம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்தார். அமெரிக்கவில் இறக்குமதி ஆகும்…
திருச்சி : இன்று காலை முதலே தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவுக்கு தொடர்புடையவர்கள் வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி…